மக்களே உஷார்..! அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..!
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒரு சில இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் இன்று முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதே போல இந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌரிகாரியம் ஏற்படலாம். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.