வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமனம்..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார், கடந்த மார்ச் 9-ம் தேதி, வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றார். இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமியைத் தேர்வு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பியிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் ஒப்புதலையடுத்து, மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார் ஜோதி நிர்மலாசாமி. அவர் இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையராக நியமணம் செய்யப்பட்டுள்ளார்.