அ.தி.மு.க.சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம்..!
மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
அ.தி.மு.க.பொதுச்செயலாளரும்,தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.சார்பில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.சார்பில் நேதாஜி ரோட்டில் இருந்து ஜான்சிராணி பூங்கா வரை மனிதசங்கிலி போராட்டம் காலை 9.30 மணியளவில் நடக்கிறது.
எனவே இந்த போராட்டத்தில் இன்னாள், முன்னாள் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட,பகுதி,வட்ட,சார்பு அணிநிர்வாகிகள்,இன்னாள்,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்,இன்னாள்,முன்னாள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள்,கழக முன்னோடிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் என் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.