சூரியன் பெயர்ச்சி… பங்குனியில் பட்டையை கிளப்ப போகும் சில ராசிகள்!

சூரியன் பெயர்ச்சி பலன்கள்: மார்ச் மாதம் 14ஆம் தேதி அன்று, சூரிய பகவான் மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். சூரியன் மீனத்தில் சஞ்சரிக்கும் பங்குனி மாதம் மீன மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ராகு பகவான் ஏற்கனவே மீனத்தில் உள்ள நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு, மீன ராசியில் சூரியன் ராகு இணைகின்றனர். இதனால் உருவாகும் கஜகேசரி யோகம், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். இதனால் பங்குனி மாதத்தில், அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அனுபவித்து பட்டையை கிளப்ப போகும் ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்

சூரியன் பெயர்ச்சி: ரிஷப ராசிக்கான பங்குனி மாத பலன்கள்

ரிஷப ராசியினருக்கு பங்குனி மாதம், மகத்தான வெற்றிகளை அள்ளிக் கொடுக்கும் மாதமாக இருக்கும். வருமான ஆதாரம் பெறுவோம். கைக்கு வரவே வராது என்று நினைத்த பணம் கைக்கு திரும்ப கிடைத்து மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வை பெறுவார்கள். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

சூரியன் பெயர்ச்சி: மிதுன ராசிக்கான பங்குனி மாத பலன்கள்

மீன ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வது மிதுன ராசிகளுக்கு, வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்குவீர்கள். வெளிநாடு செல்ல விரும்பும் நபர்கள் அதற்கான வாய்ப்பை பெறுவார்கள். அலுவலக வேலையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளால், நல்ல பலன் கிடைக்கும். இதனால் மேலதிகாரியின் பாராட்டினை பெறுவீர்கள். செல்வாக்கு மிக்க நபர்களின் சந்திப்பு மூலம், ஆதாயங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும்.

சூரியன் பெயர்ச்சி: துலாம் ராசிக்கான பங்குனி மாத பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். எதிரிகளின் சதியை வீழ்த்தி, வெற்றிவாகை சூடுவீர்கள். நீதிமன்ற வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். முதலீட்டில் நல்ல வருமானம் கிடைக்கும். மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. எனினும் யாரையும் நம்பி அதிக கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது.

சூரியன் பெயர்ச்சி: விருச்சிக ராசிக்கான பங்குனி மாத பலன்கள்

சூரிய பகவானின் சஞ்சாரம், விருச்சிக ராசியினருக்கு, சிறப்பான பலன்களை கொடுக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குழந்தைகள் தரப்பிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புத்திசாலித்தனம் மற்றும் செயல் திறன் காரணமாக மற்றவர்களின் பாராட்டுக்களையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் எனக்குமான சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

சூரியன் பெயர்ச்சி: மகர ராசிக்கான பங்குனி மாத பலன்கள்

மகர ராசியினருக்கு பங்குனி மாதம், வரப் பிரசாதமான மாதமாக அமையும். வேலையில் தொழிலில் வெற்றிகளை குவிப்பீர்கள். பல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சாதுரியத்தாலும் அறிவுத் திறனாலும், கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி, அனைவரின் பாராட்டை பெறுவீர்கள். ஆன்மீக விஷயங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *