கண்பார்வை கூர்மைக்கு… ‘இந்த’ சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்!

இன்றைய காலகட்டத்தில், பலருக்கு சிறு வயதிலிருந்து கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. டிஜிட்டல் உபகரணங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளதன் காரணமாக, சிறு வயதிலேயே கண்கள் தொடர்பான பிரச்சனைகளை குழந்தைகள் எதிர் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. நிலையில் உணவின் மூலம், கண் பார்வையை மேம்படுத்த சாப்பிட வேண்டிய பொருட்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

கண் ஆரோக்கியம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கேரட் தான். எனினும் கேரட்டை தவிர வேறு பல உணவுகளும் கண் ஆரோக்கியத்தை, பெரிதும் மேம்படுத்தி கண் பார்வையை கூர்மையாக்கும் உணவுகளை வழக்கமாக சாப்பிடுவதால், கண்ணாடி அணிய வேண்டிய நிலை மாறும் சூழலும் உருவாகலாம். பலவீனமான கண் பார்வையை மேம்படுத்த உதவும் சில உணவுப் பொருட்களையும் (Foods That Improves Eyesight) அவற்றை எடுத்துக்கொள்ளும் விதம் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

பாதாம்

மூளை கூர்மைக்கு மிகவும் அத்தியாவசிய உணவாக கருதப்படும் பாதாம் (Almonds), கண் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. பாதாமை அப்படியே சாப்பிடுவதை விட, இரவில் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பலன் இரட்டிப்பாகும். இரவில் ஊற வைத்த பாதாமை, அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம். அல்லது அப்படியே சாப்பிடலாம்.

சோம்பு

ஆயுர்வேதத்தில், சோம்பு என்னும் மசாலாவை, நேத்ர ஜோதி என்று அழைக்கின்றனர். நேத்திரம் என்றால் கண். பார்வையை சிறந்த வகையில் மேம்படுத்துவதால் இதற்கு, இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. கண்பார்வை மேம்படுவது மட்டுமின்றி, எலும்புகள் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் சோம்பு மிகவும் சிறந்தது.

கேரட்

கேரட் கண் பார்வைக்கு ஏற்ற மிகவும் சிறந்த உணவு. இதில் உள்ள வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின், கண் பார்வையை கூர்மைப்படுத்தும் சக்தி கொண்டது. இதை சாலட் வடிவிலும், சமைத்தும் உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

தேன்

அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட தேனை, பல வகைகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். காலையில் வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்கலாம்.

துளசி

துளசி இலை ஆயுர்வேதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மூலிகையாக கருதப்படுகிறது. பலவீனமான பார்வையை மேம்படுத்தும் சக்தி துளசிக்கு உண்டு. துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, மூலிகை டீயாகவோ, அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.

குங்குமப்பூ

குங்கும பூவில் கண் பார்வையை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இதற்கு உதவும். வெதுவெதுப்பான பாலில், சுத்தமான சில குங்குமப்பூ இதழ்களை கலந்து தினமும் குடிப்பது, பார்வையை கூர்மையாக்க உதவும்.

கண்பார்வையை மேம்படுத்த, மேலே கூறப்பட்டுள்ள உணவுகளுடன், எளிய கண் பயிற்சிகளையும் மேற்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும். ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் கருவிகள், நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆகிவிட்டன. என்றாலும் முடிந்த அளவு இதன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, கண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால், கண் பார்வை மேம்படுவதோடு, கண்ணாடி அணியும் நிலைமையும் ஏற்படாமல் இருக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *