மலச்சிக்கல் பிரச்சினையை வேகமாக சரிசெய்ய உதவும் 5 பழங்கள்
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எப்போதுமே வேதனையாகவே இருக்கும். இதனால் வயிற்றில் கனம், தலைவலி மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும். எனவே மலச்சிக்கல் பிரச்சனை உங்களுக்கு தொந்தரவு தந்தால் இந்த 5 பழங்களை சாப்பிட்டால் போதும்.
ஆக்டினிடின் என்ற நொதி கிவியில் உள்ளதால், இது மலச்சிக்கலைப் போக்க உதவும். அதனுடன் கிவியில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இந்த பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். செரிமானத்தை அதிகரிக்க உதவும்.
மலச்சிக்கல் போன்ற செரிமானம் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற ஆப்பிளை உட்கொள்ளலாம். ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் என்பதால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த பேரிக்காய் சாப்பிடுவதால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம். செரிமான அமைப்பும் மேம்படும். மலம் கழிப்பதை எளிதாக்க உதவும்.
மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெற பப்பாளியை உட்கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிட்டால் வயிறு நன்கு சுத்தமாகும். செரிமானத்தை மேம்படுத்தும்.