உடம்பை ஸ்லிம்மா சிக்குனு வெச்சுக்க துளசியா? கறிவேப்பிலையா? எது பெஸ்ட்
ஆயுர்வேதத்தின் படி, துளசி மற்றும் கறிவேப்பிலை இவை இரண்டுமே மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவை இன்றும் இந்தியாவில் மூலிகைகளாக உட்கொள்ளப்படுகின்றது. இவற்றை தினமும் உட்கொள்வதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதனுடன், இந்த இலைகள் உடல் எடை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே நீங்களும் ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால் துளசியை சாப்பிடலாமா அல்லது கறிவேப்பிலையை சாப்பிடலாமா என்ற குழப்பத்தில் இருந்தால், இந்த பதிவில் இதற்கான பதிலைப் பெறுங்கள்.
துளசி இலைகள்: மருத்துவ குணம் கொண்ட துளசி இலைகள் பல நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த துளசியில் (Basil) வைட்டமின்கள், தாதுக்கள், லுடீன், பீட்டா கரோட்டின், ஜியாக்சாண்டின் மற்றும் பீட்டா-கிரிப்டோக்சாந்தின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதன் மூலம் உடல் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட முடியும்.
துளசி இலையின் நன்மைகள்:
துளசி இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் இவை இதய நோய்கள், புற்றுநோய், மூட்டுவலி, சுவாசம் பிரச்சனை, சிறுநீர் கோளாறு, வயிறு உப்புசம் மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
உடல் எடையை குறைக்க உதவும்: துளசி இலைகளை உட்கொள்வது வயிற்றுக்கும் நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். அதனுடன் ஊடக எடை குறைக்கவும் இந்த துளசி உதவுகிறது. எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 முதல் 4 துளசி இலைகளை உட்கொள்ளவும்.
கறிவேப்பிலை: கறிவேப்பிலை (Curry Leave) இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுத்தம் படும் இலையாகும். இதில் ஏராளமான நார்ச்சத்து நிரம்பியிருப்பதுடன் ஹைப்போ-கிளைசெமிக் பண்புகளை இவை கொண்டுள்ளது, இது இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது.
கறிவேப்பிலையின் நன்மைகள்: கறிவேப்பிலையில் காணப்படும் அதிக நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக உடைக்கும் செயல்முறையை மெதுவாக்குகிறது, இதனால் இரத்த சர்க்கரை அளவை நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நார்ச்சத்துடன், கறிவேப்பிலையில் புரதம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் மல்டிவைட்டமின்கள் போன்ற கூறுகள் நிறைந்துள்ளது.
உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் உள்ள தனிமங்கள் உடல் பருமனை குறைக்க உதவும். இதனால் இந்த இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில், 5 அல்லது 6 கறிவேப்பிலையை மென்று, வெதுவெதுப்பான நீரை குடித்து வரலாம் அல்லது இந்த இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம். இப்படி தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும்.
இந்நிலையில் துளசி இலையை ஒப்பிடும்போது, கறிவேப்பிலை மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.