இந்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய நடிகர் விஜய்! CAA சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஏற்கத்தக்கது அல்ல என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
CAA சட்டம் அமுல்
இந்தியா முழுவதும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமுல்படுத்தப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை அறிவித்தார்.
ஏற்கனவே, மக்களவை தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டம் கொண்டுவரப்படும் எண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தினால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் இந்திய முழுவதும் CAA சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் எதிர்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உட்பட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
விஜய் கண்டனம்
இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகமும் இந்த சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.