4% அகவிலைப்படி உயர்வை விடுங்க.. HRA உயர்வை பாத்தீங்களா..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு தான் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது 46%இல் இருந்து 50%ஆக உயர்ந்துள்ளது.

இது தவிர பணிக்கொடைக்கான வருமான வரி விலக்கு வரம்பும் 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் வீட்டு வாடகை கொடுப்பனவு (HOUSE RENT ALLOWANCE- HRA) வழங்கப்படுகிறது. இது ஊழியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப மாறுபடும். இந்நிலையில் இந்தியாவின் வெவ்வேறு வகை நகரங்களில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனுவை 3 , 2 மற்றும் 1 சதவிகிதம் என மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

மத்திய அரசு இந்திய நகரங்களை X வகை, Y வகை மற்றும் Z வகை என பிரித்து வைத்துள்ளது. வகை நகரங்கள் ஒய்வகை நகரங்கள் என பிரித்துள்ளது. இதில் X வகை நகரங்களில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு, அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 30 சதவிகிமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 27 சதவிகிதம் வழங்கப்படும் கொடுப்பனவு 3 சதவிகிதம் உயர்த்தி 30 சதவிகிதமாகியுள்ளது. அதே போல Y வகை நகரங்களில் கொடுப்பனவு 18 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாகவும், Z வகை நகரங்களில் 9 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

X வகை நகரங்கள்: டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, மும்பை, புனே, சென்னை , கொல்கத்தா ஆகியவை X வகை நகரங்கள். இங்கு 30% வீட்டு வாடகை கொடுப்பனவு கிடைக்கும்.

Y வகை நகரங்கள்: பாட்னா, லக்னோ, விசாகப்பட்டினம், குண்டூர், விஜயவாடா , கௌஹாத்தி, சண்டிகர், ராய்ப்பூர், ராஜ்கோட் , ஜாம்நகர், வதோதரா ,சூரத், பரிதாபாத், நொய்டா , ராஞ்சி, ஜம்மு, ஸ்ரீநகர், குவாலியர், இந்தூர், போபால், ஜபல்பூர், உஜ்ஜெயின், கோலாப்பூர், அவுரங்காபாத், நாக்பூர், சோலாப்பூர், நாசிக், அமராவதி, புவனேஸ்வர், கட்டாக், ரூர்கேலா, அமிர்தசரஸ் , ஜலந்தர், லூதியானா ,ஜெய்ப்பூர், ஜோத்பூர், அஜ்மீர், மீரட், ஜான்சி ,வாரணாசி ,ஆக்ரா ,கான்பூர் ஆகியவை Y வகை நகரங்களாக உள்ளன

Z வகை நகரங்கள்: X மற்றும் Y வகை நகரங்களின் பட்டியலில் இடம்பெறாத நகரங்கள் அனைத்தும் Z வகை நகரங்களாக உள்ளன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *