இசான் கிஷன், சஞ்சு சாம்சன் கிடையாது.. இந்த 3 விக்கெட் கீப்பர்கள் தான் டி20 உலககோப்பையில் முன்னுரிமை
ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு முன்பாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பைக்கு ஐபிஎல் ஒரு நல்ல பயிற்சி களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஒருமுறை கூட ஐசிசி கோப்பையில் வெல்லவில்லை என்பதால் ஜெய்ஷா ரசிகர்களிடம் ஒருமுறை இந்தியா கோப்பை வெல்லும் என உறுதி அளித்திருக்கிறார்.
இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் ஏற்கனவே யார் யார் இந்த தொடரில் விளையாட போகிறார்கள் என்ற பட்டியலை பிசிசிஐ தயார் செய்து வைத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த உலகக் கோப்பைக்கு மூன்று விக்கெட் கீப்பர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அது யார் என்று தற்போது பார்க்கலாம்.
ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டன் என்ற பெயரை கே.எல். ராகுல் பெற்றிருக்கிறார். மேலும் உலகக்கோப்பை தொடரில் ராகுல்தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதனால் டி20 உலக கோப்பையிலும் கே எல் ராகுலையே விக்கெட் கீப்பராக பயன்படுத்த இந்தியாவின் நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கே.எல் ராகுல் கடைசியாக டி20 போட்டியில் பெரும் அளவு விளையாடாத நிலையில் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதேபோன்று இரண்டாவது விக்கெட் கீப்பராக துருவ் ஜூரலை இடம்பெறுவார் என தெரிகிறது. ஜூரல் செயல்பாடு தேர்வு குழுவினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
மேலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக அவர் செயல்பட்ட விதம் ,குல்தீப் விக்கெட் எடுக்க அவர் சொன்ன அட்வைஸ் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இதனால் துருவ் ஜூரலுக்கு டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று மூன்றாவது விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா இடம்பெறுவார் என தெரிகிறது.
ஜித்தேஷ் சர்மா, ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் தமக்கு கிடைத்த வாய்ப்பை இந்திய அணிக்காக அவர் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். இதனால் ஜித்தேஷ் சர்மாவை இந்திய அணியில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இஷான் கிசன், சஞ்சு சாம்சன் பெயர் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் ஐபிஎல் தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு டி20 உலக கோப்பையில் இடம்பெற வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.