என்ன விளையாடுறீங்களா? கோலியை நீக்கினால் அவ்வளவு தான்.. எச்சரிக்கை கொடுத்த இங்கிலாந்து வீரர்
வரும் 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி இந்தியாவில் சேர்க்கப்பட மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வரும் ஜூன் ஒன்றாம் தேதி ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இங்கு அமைக்கப்படும் ஆடுகளங்கள் தோய்வாக இருக்கும் என்பதால் அது விராட் கோலியின் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்காது என்று கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி விராட் கோலியை இந்த தொடரில் சேர்க்க வேண்டாம் என்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பேச்சி நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்திய டி20 கிரிக்கெட்டுக்காக அதிக ரன்கள் மற்றும் 4000 ரன்களுக்கு மேல் சர்வதேச டி20 போட்டியில் அடித்த ஒரே இந்தியன் என்ற பெருமையை விராட் கோலி படைத்திருக்கிறார். 37 அரை சதம் அடித்திருக்கும் விராட் கோலி சராசரியாக 51 ரன்கள், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் டி20 உலக கோப்பையில் 2014 மற்றும் 2022 ஆகிய தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் மற்றும் 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது ஆகிய விருதுகளை விராட் கோலி கைப்பற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிராட், இந்த செய்தி உண்மையாக இருக்கக் கூடாது. நான் ரசிகர்களின் பார்வையில் இருந்து கூறுகிறேன். டி 20 கிரிக்கெட் வளர வேண்டும் என்பதற்காகத்தான் ஐசிசி தற்போது இந்த போட்டியை அமெரிக்காவில் நடத்துகிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி நியூயார்க்கில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
விராட் கோலி போன்ற வீரர் உலகின் எந்தப் பகுதியில் விளையாடினாலும் அவருக்காகவே பெரும் அளவில் கூட்டம் சேரும். இதற்காகவே விராட் கோலியை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று பிராட் கூறியிருக்கிறார். ஆடுகளம் தொய்வாக இருந்தாலும் விராட் கோலி நிலைத்து நின்று ஆடி கடைசி வரை களத்தில் நின்று ரன்களை சேர்க்கும் திறமையுடையவர். இதனால் விராட் கோலி அணி இருந்து நீக்கப்பட்டால் அது மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.