ரஷ்யாவிடம் இருந்து விலக நினைக்கிறதா இந்தியா? ராணுவ ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள திருப்பம்!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் தாக்கம் விளைவாக ரஷ்யாவின் நீண்ட கால நண்பரான இந்தியாவுடனான உறவில் மாற்றங்கள் ஏற்படும் வகையிலான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.

நீண்ட கால நட்பு நாடுகள்
சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே பாரம்பரியமாக இந்தியாவின் நட்புறவு சிறப்பாக இருந்து வந்துள்ளது, அதாவது இந்தியா நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவுடன் நெருக்கமான உறவைப் பேணிக்காத்து வருகிறது.

சமீபத்திய நிகழ்வுகள் இந்தியாவை ஒரு சிக்கலான புவிசார் அரசியல் கயிற்றில் நடக்க வைத்துள்ளன. உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கண்டிக்கத் தவறினாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்தும் விலகிக் கொண்டுள்ளது.

ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியில் வீழ்ச்சி
40 வருட நட்பு நாடுகளாக இருந்தும், கடந்த 2019 முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவுக்கான ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி 50% சதவீதம் சரிந்துள்ளது.

SIPRI-யின் சமீபத்திய அறிக்கையின் படி, ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான ஆயுதங்களை இந்தியா தொடர்ந்து வாங்கி வந்தாலும், மொத்த ஆயுத இறக்குமதியில் இது 36% சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

இந்தியாவின் தற்போது உள்ள மொத்த ஆயுத திறனில் 65% ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2019 முதல் 2023 ஆண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில் அதிகப்படியான ஆயுத இறக்குமதி செய்த நாடாக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி காரணம்
ரஷ்ய ஆயுதங்களை பெரிதும் நம்பி இருக்கும் இந்தியா, தற்போது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மேம்பட்ட ஆயுதங்களை நோக்கி அதிகம் பார்க்க தொடங்கியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தம் மற்றும் நாட்டின் ராணுவ ஆயுத ஆதாரங்களை பன்முகப்படுத்த விரும்புதல் ஆகியவை முக்கிய காரணமாக இருக்கலாம்.

அத்துடன் போர் விளைவாக S-400 ரக உபகரணங்களின் ஏற்றுமதி தாமதம் ஆகியவை காரணம் சொல்லப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *