வெடித்து சிதறிய ரஷ்யாவின் Ilyushin Il-76: விமானத்தில் பயணித்த 15 பேர் பலி!

இவானோவோ மாகாணத்தில் ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்
மாஸ்கோவிற்கு மேற்கே அமைந்துள்ள Ivanovo எனும் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ரஷ்ய ராணுவ போக்குவரத்து விமானம் தரை இறங்கும்போது விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியுள்ளது.

Ilyushin Il-76 எனும் இந்த பெரிய நான்கு என்ஜின் சரக்கு விமானம், விமான தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

விமானத்தில் இருந்த எட்டு பணியாளர்கள் மற்றும் ஏழு பயணிகள் உட்பட மொத்தம் 15 பேரும் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்தின் காரணம் இன்னும் விசாரணையில் இருந்தாலும், ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரிகள், என்ஜின் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

விபத்துக்கு முன்னர் விமானம் தீப்பிழம்புகளில் சிக்கி இருப்பதைக் காட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்த சம்பவம், உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில் நடந்துள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய விமான விபத்துகள் அதிகரித்து வருவதாக ராணுவ நிபுணர்கள் கவனித்துள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *