8 ஆபரேஷன், ஒரு கையளவு மாத்திரைகள், அஜித்தின் உடல்நிலை குறித்து பயில்வான்

நடிகர் அஜித்தின் உடல்நிலை குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் அஜித்
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்தது.

இதனைத்தொடர்ந்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்கு சென்றபோது, காதுக்கு வரும் நரம்பில் வீக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

அதனைதொடர்ந்து அவருக்கு அறுவைசிகிச்சை நடந்தது. பின் நலமுடன் வீடு திரும்பினார். அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் குறித்து வதந்திகள் நிறைய வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பயில்வான் ரங்கநாதன் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது..,
” விடாமுயற்சியின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு செல்லும் முன் அஜித் உடலை முழு பரிசோதனை செய்துகொண்டார்.

அஜித்திற்கு கண்ணிலும் கோளாறு இருக்கிறது. அதற்காகவும் அவர் கண் மருத்துவரை அணுகுவார் என்று தெரியும்.

அப்போலோ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்த பின் மருத்துவர் அவருக்கு காதுக்கு பக்கத்தில் இருக்கும் நரம்பில் வீக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதை உடனே ஆபரேஷன் செய்துவிடலாம் என மருத்துவர் கேட்க அஜித்தும் ஆபரேஷன் செய்து குணமடைந்து வீடு திரும்பினார்.

ஒருமுறை நாங்கள் அஜித்குமாரின் அலுவலகத்திற்கு சென்றபோது அவர் கை நிறைய மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறேன். என் உடலில் அவ்வளவு நோய் இருக்கிறது என்று சொன்னார்.

அஜித்திற்கு இதுவரை 8 ஆபரேஷன்கள் நடந்திருக்கின்றன அவருக்கு முதுகுத்தண்டில் கீறல் விழுந்திருப்பது எனக்குத் தெரியும்.

அவரால் விஜய் போன்று காலை வளைத்து, நெழித்தெல்லாம் ஆட முடியாது. அப்படி ஆடினால் அவரது உடல் நலத்திற்கு அது கேடை கொண்டு வந்து விடும்.

அஜித் குமார் தலையில் டை அடிக்காமல் இருப்பதற்கு காரணமும் மருத்துவரின் பரிந்துரை தான்” என்று கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *