வரவுள்ள மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவி பெயர்கள் வெளியானது
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி வரிசையில் வரவிருக்கின்ற மாடல்களின் பெயர்களை XUV 7XO, XUV 5XO, XUV 3XO மற்றும் XUV 1XO என வர்த்தக முத்திரைக்கு பதிவு செய்துள்ளது.
மஹிந்திரா தனது பிராண்ட் பெயர்களில் இறுதியாக ‘O’ என்ற ஆங்கில வார்த்தையை அடிப்படையாக கொண்டே வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் ICE மாடல்களுக்கு XUV7OO, XUV5OO, XUV3OO, XUV4OO, Scorpio, Bolero என்ற பெயர்களை பயன்படுத்தி வருகின்றது.
இந்த வரிசையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இந்த பெயர்களும் இறுதியாக ‘O’ என முடிவதாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு இறுதி முதல் விற்பனைக்கு வர துவங்குகின்ற XUV.e8 கார் முதல் பல்வேறு மாடல்களுக்கு இந்த பெயர் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும் விற்பனையில் உள்ள தார், பொலிரோ மற்றும் ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட மாடல்களுக்கு .e என்பதனை பிற்பகுதியில் இணைத்து Scorpio.e, Bolero.e மற்றும் Thar.e என எலக்ட்ரிக் மாடல்களாக வரவுள்ளது.
சோதனை ஓட்டத்தில் மஹிந்திரா நிறுவனம் பல்வேறு மாடல்களில் BE.05 தொடர்ந்து சாலையில் தென்பட்டு வரும் நிலையில் வரவுள்ள புதிய மாடல்கள் INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளது.
XUV.e8 எஸ்யூவி மாடல் 450கிமீ முதல் 600 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் வரக்கூடும். விற்பனையில் உள்ள XUV700 எஸ்யூவி காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ளது.
அடுத்த சில நாட்களில் மஹிந்திரா XUV300 மற்றும் இதன் அடிப்படையில் வரவுள்ள XUV300 எலக்ட்ரிக் மாடலுக்கு XUV 3XO என்ற பெயரை பயன்படுத்த வாய்ப்புள்ளது.