ஹூண்டாய் என்-லைன் காரின் மைலேஜ் இவ்வளவு ஜாஸ்தியா? இதை யாருமே எதிர்பார்க்கலயே!
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் தனது கிரெக்டா என்-லைன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 16.82 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் தான் கிரெக்டா காரின் பிளக்ஷிப் மாடல் காராக இருக்கிறது. மக்கள் பலர் தற்போது இந்த கார் குறித்து பரபரப்பாக பேசி வரும் நிலையில் இந்த காரின் மைலேஜ் குறித்த சில முக்கியமான தகவல்களை தான் இங்கே காணப் போகிறோம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் காருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பலர் நீண்ட நாட்களாக இந்த என்-லைன் வேரியண்ட் காரை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இவர்கள் காத்திருப்பிற்கு பலனாய் ஹூண்டாய் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 16.82 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா ஆன்லைன் காரை பொறுத்தவரை என்8 மற்றும் என்10 ஆகிய இரண்டு விதமான வேரியன்டுகளில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் ஹுண்டாய் நிறுவனம் ஏகப்பட்ட அம்சங்களை உட்புகுத்தி உள்ளது. இதுபோக இந்த காரில் ஏகப்பட்ட சிறப்பு அம்சங்களும் உட்பகுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காரின் மைலேஜ் தான் தற்போது மிக பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த காரின் மைலேஜ் பற்றி பார்க்கும் முன்னர் இதன் இன்ஜின் பற்றி பார்த்து விட வேண்டும். இந்த ஹூண்டாய் கிரெக்டா என்-லைன் காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160 எச்பி பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கிரெட்டா காரில் டர்போ இன்ஜினுடன் மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருப்பது இது முதல் முறையாகும். இதற்கு முன்னர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமே இருந்தது.
இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை ஏஆர்ஏஐ சான்றின்படி மேனுவல் வேரியன்டில் லிட்டருக்கு 18 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. ஆட்டோமேட்டிக் வேரியன்டை பொறுத்தவரை 18.2 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. என்லைன் என்பது ஒரு ஸ்போர்டியர் வெர்ஷன் கார் என்பதால் இதில் டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இதில் மைலேஜ் குறைவாக இருக்கும் என பலர் கணித நிலையில் லிட்டருக்கு 18 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருவது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த புதிய கிரெட்டா என்லைன் காரின் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த காரின் அறிமுகத்திற்கு முன்பே இந்த காருக்கான காத்திருப்பு காலம் 8 மாதமாக கூடிவிட்டது. அந்த அளவிற்கு இந்த காரை பலர் புக் செய்து விட்டனர். இந்த காரின் டிசைன் மொழியை பற்றி பார்க்கும் போது பழைய காரில் உள்ள அதே டிசைன் மொழி தான் இந்த காரிலும் பின்பற்றப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய ஃபேஸ்லிப்ட் மாடலில் உள்ள அதே டிசைன் தான் இதிலும் உள்ளது. முன்பக்கம் ஹெட்லைட் மற்றும் டிஆர்எல் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிரில் பகுதியில் என்லைன் பேட்ஜிங் மற்றும் முன்புறத்தில் சிவப்பு நிற ஆக்ஸென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டிலும் சிவப்பு லைன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிவப்பு நிறத்தில் பிரேக் கேலிபர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்புறத்தில் மூன்று ஸ்போர்க் கொண்ட ஸ்டேரிங் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோக மெட்டல் பெடல்கள் ,புதிய கியர் ஸிஃப்டர்கள், கருப்பு நிற அப்ஹோல்சரி ஆங்காங்கே சிவப்பு நிறங்கள் கொண்டு இந்த காரின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சிவப்பு நிற லைட்டிங் அம்பியன்ஸ் உடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காரின் உட்புறத்தில் 10.25 இன்ச் அளவில் டூயல் ஸ்கிரீன்கள் உள்ளது. ஒன்று டிரைவருக்கான டிஸ்ப்ளேயாகவும் மற்றொன்று டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டமாகவும் பயன்படுகிறது. இதுபோக இந்த காரில் டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், வெண்டிலேட்டட் சீட்டுகள், ஆடியோ சிஸ்டம், பவர்டு டிரைவர் சீட் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.