மூழ்கிய வேகத்தில் மீனை வேட்டையாடிய கழுகு! கடைசியில் மீன் தப்பியது எப்படி?
கழுகு ஒன்று வேட்டையாடி மீனை கவ்விய நிலையில், இறுதியில் அதனை எடுத்துச் செல்ல முடியாமல் தோல்வியடைந்து சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
தோல்வியடைந்த கழுகு
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள்.
இந்த வீடியோவில் கழுகு ஒன்று தோட்டா பாயும் வேகத்தில் கடலுக்குச் பாய்ந்து சென்று மீனைப் பிடித்து வெளியே எடுத்துள்ளது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இக்காட்சி இருக்கின்றது.
அதிகமான காட்சியில் மீனை காலில் கவ்விக்கொண்டு செல்வதை அவதானித்திருக்கும் நாம், தற்போது பிடிபட்ட மீனை கைவிட்டு தோல்வியை சந்தித்த காட்சி இதுவாகும்.
ஆனாலும் இரண்டு முறை முயற்சித்து மீனை பாதுகாக்க முயன்றும் இறுதியில் மீன் எஸ்கேப் ஆகியுள்ளதுடன், கழுகு ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.