நடிகை ஸ்ருதி ஹாசனின் சொத்து மதிப்பு.. முழு விவரம்
ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளும், திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையுமானவர் ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதற்கு முன் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்திருந்தார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் இவர் பல ரசிகர்களை கவர்ந்தார். சூர்யாவின் 7ஆம் அறிவு படத்திற்கு பின், விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வந்தார்.
இவர் கடைசியாக சலார் முதல் பாகத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது Santanu Hazarika என்பவரை ஸ்ருதி காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியளவில் பிரபலமான நடிகை ஸ்ருதி ஹாசனின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
சொத்து மதிப்பு :
நடிப்பு, பாடகி என திரை துறையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசனின் சொத்து மதிப்பு ரூ. 80 கோடி முதல் ரூ. 90 கோடி இருக்குமாம்.
சம்பளம் :
சிறு வயதில் இருந்தே நடிக்க துவங்கிய ஸ்ருதி ஹாசன், இதுவரை 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளாராம். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்
கார்கள் :
ஸ்ருதி ஹாசனை பயன்படுத்தி வரும் பிரம்மாண்ட சொகுசு கார்களில் ஒன்று Range Rover Sport, இதன் விலை ரூ. 1.76 கோடி. மேலும் இவர் பயன்படுத்தும் சொகுசு கார் Audi Q7, இதன் விலை ரூ. 86 லட்சம்.
வீடு :
மேலும் மும்பையில் ஒரு சொகுசு பங்களா ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ்ஸில் முதலீடு செய்திருக்கிறார் என தகவல் கூறப்படுகிறது.