சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், லாபம் அதிகரிக்கும்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரகங்களின் ராசிகளை தவிர நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி ஆகிய மாற்றங்களும் ஏற்படுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவமும் உள்ளது.
அறிவாற்றல், உலக இன்பம், பணம், ஈர்ப்பு, திருமண வாழ்க்கை, பேச்சாற்றல், செல்வம், பெருமை, மகிழ்ச்சி, செழிப்பு, ஆடம்பரம், அன்பு ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் மார்ச் மாத இறுதியில், குரு பகவானின் ராசியான மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அந்த நபர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார். சுக்கிரன் பெயர்ச்சி ஆனவுடன் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடக்கும். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். இவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்துமுடியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிம்மம் (Leo)
மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இவர்களின் பொருளாதார நிலை மேம்படும். இந்த நேரத்தில், பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும். முதலீடுகள் மூலம் நல்ல பண வரவு இருக்கும். பங்குச் சந்தை அல்லது லாட்டரி மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில், ஊதிய உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம் (Cancer)
ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சி காலத்தில் அதிக பயணங்களை மேற்கொள்வார்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் திரும்ப கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்.
கன்னி (Virgo)
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பின் முழுமையான பலனை இப்பொழுது பெறுவீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலம் லாபகரமானதாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெற்றிகரமான பல திட்டங்களை தீட்டுவீர்கள்.
விருச்சிகம் (Scorpio)
சுக்கிரன் பெயர்ச்சி காலத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நடந்து முடியும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான நேரமாக இருக்கும்.
மீனம் (Pisces)
ஜோதிட சாஸ்திரப்படி மீன ராசிக்காரர்களுக்கு இந்த சமயம் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்பொழுது திரும்ப கிடைக்கும். இப்பொழுது முதலீடு செய்ய ஏற்ற நேரமாக இருக்கும். இப்பொழுது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் உடன் புணிபுரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.