கழுத்தில் கருப்பு கருப்பா இருக்கா? ‘இந்த’ மேஜிக் வைத்தியத்தை செய்து பாருங்கள்..

ஒரு சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்து வேறு ஒரு நிறமாகவும் இருக்கும். குறிப்பாக, கழுத்துக்கு பின்புறத்தில் கருமை நிறம் காணப்படும். இதை நீக்குவதற்கு ஸ்க்ரப்பிங், ஃபேஷியல் என எதை செய்தும் பெரிதாக பயண் இல்லாமல் போயிருக்கும். இதனால் இதை வெறுத்துப்போய், “நமது படைப்பே இப்படித்தான் போல” என்று நினைத்துக்கொள்வர். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. இதற்கு பின்னால் சில மருத்துவ காரணங்களும் இருக்கின்றன. அவை என்ன? கழுத்தில் இருக்கும் கருமை நிறத்தை எப்படி நீக்குவது? இங்கு பார்ப்போம்.

கழுத்தில் கருமை நிறம் வருவதற்கு காரணம் என்ன?

Sun Tan: சூர்ய ஒளிக்கதிர்களால் நிறம் மாறுதல்

உங்கல் சருமம் அதிக நேரம் சூரிய ஒளியில் படும் போது, அது கருமையாக வாய்ப்புள்ளது. இது சன்-டான் என்று மேலை நாடுகளில் (நம் ஊரில் கூட) அழைக்கப்படுகிறது. நமது தோலில் உள்ள மெலனின் காரணமாக இது ஏற்படுவதாக கூறப்படுகிறது. மெலனின், சூரியனின் புற ஊதா கதிர்களால் நமது சரும செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. இது பாதிப்படையும் போதுதான் நமது கழுத்தும் கருமை நிறத்திற்கு மாறுகிறது.

மருத்துவ காரணங்கள்:

>ஹார்மோன் தெரபி மேற்கொண்டால் கருமையாகும்
>கர்ப்பத்தடுப்பு மாத்திரைகள் அல்லது ஸ்டெராய்ட்ஸ் போன்ற மருந்துகளை எடுத்துக்கொண்டால் கழுத்து கருமையாகலாம்.
>மரபியல் ரீதியான காரணங்கள்
>தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு கழுத்து கருமையாகலாம்
>உடல் பருமனுடன் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோருக்கு கழுத்து கருமையாகலாம்.

எப்படி போக்குவது?

கழுத்து கருமையாக இருப்பதை தீர்க்க, பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. இதற்கென்று சில வீட்டு வைத்தியங்களும் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஓட்ஸ்:

ஓட்ஸில் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் உள்ளது. இது சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் போன்ற வேலைகளை செய்கிறது. கழுத்து கருமையை போக்குவதற்கும் ஓட்ஸ் உதவுகிறது. இதை டெஸ்ட் செய்ய, சில கரண்டி ஓட்ஸ்களை எடுத்து அதை அரைத்து நேரடியாக கழுத்தில் தடவலாம். வேண்டுமென்றால் சிரிதளவு tomato pureeயுடன் இதை சேர்த்துக்க்கொள்ளலாம். கழுத்தில் கருமையாக இருக்கும் பகுதிகளில் இதை தினசரி தடவி வந்தால், மாற்றம் காணலாம்.

ஆரஞ்சு தோல்:

ஆரஞ்சு தோலில் சருமத்தை வெண்மையாக்கும் தன்மை உள்ளதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சருமத்தை சுத்தப்படுத்தும் டைரோசைன் என்ற பன்பு இதில் உள்ளதால், இது சருமத்தை வெள்ளையாக்கும் என நம்பப்படுகிறது. ஆரஞ்சு தோலைப காய வைத்து, பொடி செய்து அதை கருப்பாக இருக்கும் இடத்தில் தடவலாம். இந்த பொடியுடன் பால் அல்லது ஆரஞ்சு சாற்றினை கொஞ்சமாக சேர்த்து பேஸ்ட் ஆக்கலாம். கழுத்தில் தடவியவுடன் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து இதை கழுவி விட வேண்டும்.

எலுமிச்சை:

எலுமிச்சையில் ஆக்ஸிடன்ட்ஸ் சத்து உள்ளது. இது சருமத்தை மிளிரச் செய்ய உதவும். இதில் உள்ள டைரோசைன் சத்துகள் முகத்தை பளபளப்பாக்க உதவும் என நம்ப்பப்படுகிறது. சாதாரண சருமத்தை கொண்டவர்கள், எலுமிச்சையை முகத்தில் உபயோகிக்கலாம். ஆனால், சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் எலுமிச்சையுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பயன்படுத்துவது நன்று என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை கழுத்தில் தடவியவுடன் 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து விட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது, கழுத்தின் கருமையை நீக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *