மாதவிடாய் சுழற்சி பிரச்சனையா? ‘இந்த’ சிம்பிள் உடற்பயிற்சிகளை செய்து பாருங்கள்..

மாதவிடாய் சுழற்சி, ஒரு சில பெண்களுக்கு சரியாக அமையாது. இதற்கு மருத்துவ ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன. இதனை ஒழுங்குபடுத்துவது, மாதவிடாய் சரியான நேரத்திற்கு வராததை அனுபவிக்கும் பல பெண்களுக்கு இன்றியமையாததாக உள்ளது. ஒழுங்கற்றா மாதவிடாய், இதை அனுபவிக்கும் பெண்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து அவர்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும். பொதுவாக மாதவிடாய் சுழற்சி காலம், 28 நாட்கள் என அறியப்படுகிறது. இருப்பினும், இது 21-38 நாட்கள் வரை கூட இருக்கலாம். 35 நாட்களுக்கு மேல் ஆகியும் மாதவிடாய் ஆகவில்லை என்றால், மருத்துவரை அணுகி உடலில் என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருப்பதற்கு, பல மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. இதற்கு தீர்வாக, மருத்துவ நிபுணர்கள் சில வீட்டு உடற்பயிற்சிகளை பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன தெரியுமா?

ஏரோபிக் உடற்பயிற்சிகள்:

ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, வேக நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள், ஏரோபிக் பயிற்சிகளாக கருதப்படுகின்றன. இவை, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் ஹார்மோன்கள் சுரக்க வைக்க உதவுமாம். இந்த உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது.

தினசரி யோகா பயிற்சி:

யோகா பயிற்சி, மாதவிடாய் வருவதற்கான சரியான பயிற்சியாக பார்க்கப்படுகிறது. மத்யாசனா, தனுராசனா, அதோ முக்கா ஸ்வனாசனா, மலானாசனா போன்ற யோகா பயிற்சிகள் இதற்கு உகந்தவையாக கருதப்படுகின்றன. இவை, இடுப்பு பகுதிக்கு அழுத்தம் கொடுக்கும் உடற்பயிற்சியாகவும் கருதப்படுகின்றன. இதனால் மாதவிடாய் கோளாறு சரியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ட்ரெந்த் வர்க்-அவுட்:

தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஜிம் அல்லது ஹெவி உடற்பயிற்சிகள், மாதவிடாய் வருவதற்கு உதவி புரிகின்றன. இவை, ஹார்மோன் சமநிலையின்மையை சீராக்குகிறது. சிலருக்கு பிசிஓஎஸ் பிரச்சனை காரணமாக மாதவிடாய் வராமல் இருக்கும். அந்த பிரச்சனையை சமாளிக்கவும் இந்த உடற்பயிற்சி உதவுகிறது.

ஸ்குவாட்:

எளிமையான, அதே சமயத்தில் மிகவும் பயனுள்ள உடற்பயிற்சிகளுள், ஸ்குவாட் உடற்பயிற்சியும் ஒன்று. இந்த உடற்பயிற்சி, உங்களது உடலின் கீழ்பகுதியை வலிமைபடுத்த உதவும். இதை செய்வது மிகவும் சிம்பிள், நாற்காலி இல்லாமல், அதில் அமர்ந்து எழுந்திருப்பது போல செய்ய வேண்டும். இதை இன்னும் பயணுள்ளதாக மாற்றுவதற்கு, ஜம்பிங் ஸ்குவாட்ஸ் செய்யலாம். அதாவது, அமர்ந்து எழுந்து கொள்ளும் போது குதித்து எழுந்து கொள்ள வேண்டும்.

மூச்சுப்பயிற்சி:

மன அழுத்தமும் மாதவிடாய் சுழற்சியை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை சமாளிக்க உதவும். மூச்சுப்பயிற்சி செய்வதால் மனம் தெளிவடைந்து உடலும் சாந்த நிலையை அடையும். மன அழுத்த நிலை குறைவதால் மாதவிடாய்க்கான ஹார்மோன்கள் சரியாக இயங்கி, மாதவிடாயும் சரியான நேரத்திற்கு ஏற்படும் என கூறப்படுகிறது.

ப்ளாங்க்:

பிளாங்க் உடற்பயிற்சி, உடலின் முக்கிய தசைகளை வலுப்படுத்த ஒரு சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இது மாதவிடாய் சுழற்சியையும் சீராக்க உதவும். இந்த உடற்பயிற்சியை, ஒரு நாளைக்கு 30 முதல் 1 நிமிடம் வரை கூட செய்யலாம். ஆரம்பத்தில் இந்த சிறிது நேரம் செய்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நேரத்தை அதிகரிக்கலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *