என் மனைவி நன்றாக கவனித்து கொண்டார்.. முதல் முறையாக மவுனத்தை கலைத்த முரளி விஜய்

தமிழகத்திலிருந்து இந்திய கிரிக்கெட்டிற்கு, சென்று சாதித்தவர்கள் பட்டியலில் முக்கியமான நபராக விளங்குகிறார் முரளி விஜய். கவாஸ்கருக்கு பிறகு சிறந்த தொடக்க வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளி விஜய் தான் என்று அண்மையில் ரவி சாஸ்திரி பாராட்டினால் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதுவரை 61 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3982 ரன்களை முரளி விஜய் குவித்திருக்கிறார். இதில் 12 சதங்களும், 15 அரை சதங்களும் அடங்கும். இதேபோன்று 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள முரளி விஜய் ஒன்பது சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

எனினும் முரளி விஜய் தவிர்க்க முடியாத வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் மற்றும் பார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து தனியார் நாளிதழ் ஒன்றுக்கு கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அளித்த பேட்டியை பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்ததை போல் ஒருநாள் கிரிக்கெட்டில் எனக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை.

சில வீரருக்கு இரண்டு போட்டிகளில் தான் வாய்ப்பு வழங்கப்படும். அதில் அவருடைய திறமையை நிரூபித்தாக வேண்டும். என்னை போல அதிரடி வீரர்களுக்கு வேகமாக ரன் குவிக்கும் போது விரைவில் ஆட்டம் இழக்கும் வாய்ப்பு இருக்கும். இப்படி இருக்கும் போது அதிக போட்டிகளில் வாய்ப்பு தர வேண்டும். ஆனால் எனக்கு இந்திய அணிவில் அப்படி ஒரு ஆதரவு கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது.

சேவாக்கிற்கு 5 போட்டிகள் கிடைத்தால், எனக்கு இரண்டு போட்டிகள் தான் வாய்ப்பு கிடைக்கும். அணியில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் பேசும்போது கிரிக்கெட் தொடர்பான இன்னொரு புரிதல் நமக்கு ஏற்படும். மேலும் அணியில் வித்தியாசமான குணாதிசயத்தை வீரர்கள் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கூட மூன்று முறை அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கின்றேன். நான் காயமடைந்த போதெல்லாம் என்னுடைய மனைவி நிகிதா, என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். எப்போதும் மைதானத்தில் இருந்து பயிற்சி செய்வது தான் எனக்கு பிடிக்கும். இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

உங்களுடைய உடலை நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள். யோகா அதிகமாக செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடலை நீங்கள் வலுவாக பார்த்துக் கொண்டால் பிற்காலத்தில் நீங்கள் நன்றாக வாழலாம். எனக்கு வாழ்க்கையில் எல்லாமே கிடைத்தது இருப்பினும் நான் வீட்டை விட்டு வெளியேறி 20 மாதம் தனியாக ஒரு அறை எடுத்து தான் தங்கினேன்.

இளம் வயதில் ஊர் சுற்றிக்கொண்டு இருப்பேன். ஆனால் சிலரின் அறிவுறுத்தல் மற்றும் கடவுளின் ஆசியால்தான் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். அதன்பிறகு கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தேன் என்று முரளி விஜய் கூறியிருக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *