கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி சென்னையில் கைது..!
போதைப்பொருள் கடத்தல் கிங்பின் ஜாபர் சாதிக் கடந்த வாரம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்டார். நியூசிலாந்ந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கோடி கணக்கு ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை ஜாபர் சாதிக் கடத்தியதாக என்.சி.பி போலீசார் விசாரணையில் அம்பலமானது.
’அயன்’ திரைப்பட பாணியில் உணவு பொருள், சத்து மாவு பாக்கெட்டுகளில் போதைப்பொருளை கடத்துவதில் ஜாபர் சாதிக் ஜித்து என சொல்லப்படுகிறது.
திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் அமைப்பாளரான ஜாபர் சாதிக் போதைப்பொருள் மூலம் ஈட்டிய வருமானத்தை கட்சி நிதிக்கு வழங்கியதாக சொல்லப்படுகிறது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் பல்வேறு திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். தமிழில் கயல் ஆனந்தி நடித்துள்ள ’மங்கை’ திரைப்படத்தை போதைப்பொருள் மூலம் ஈட்டிய வருமானத்தில் தயாரித்ததாக ஜாபர் சாதிக் என்.சி.பி அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியான சதானந்தம் (எ) சதா என்பரை நேற்று இரவு என்.சி.பி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் போதைப்பொருள் கடத்த ஏதுவாக சதா குடோன் ஒன்று வைத்திருந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த என்.சி.பி. போலீசார் சதா-வை நேற்று கைது செய்து மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் என்.சி.பி. போலீசார் டிரேன்சிட் வாரண்ட் பெற்று சதாவை விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து சென்றனர்.