பாரிஸ் 2024 ஒலிம்பிக்: சிறப்பு நாணயங்களை வெளியிட்டது பிரான்ஸ்!
ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பிரான்ஸ் புதிய நாணயங்களை வெளியிட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள்
வருகின்ற கோடை காலத்தில் பாரிஸ் நகரம் பிரான்ஸ் நாட்டிற்கு மட்டும் தலைநகரமாக இல்லாமல் ஒட்டுமொத்த உலகிற்கும் தலைநகராக மாறவுள்ளது.
அதாவது, 33வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடரை பாரிஸ் நகரம் தொகுத்து வழங்க உள்ளது.
பிரான்ஸில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் இருந்து பாரிஸ் நகருக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நாணயங்களை வெளியிட்ட பிரான்ஸ்
இந்நிலையில் வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை வரவேற்கும் விதமாக பிரான்ஸ் புதிய நாணயங்களை வெளியிட்டுள்ளது.
இதற்காக பிரான்ஸ் அரசு அர்ப்பணிக்கப்பட்ட 3 நினைவு €2 நாணயங்களை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாகவும் ஐரோப்பாவின் பல்வேறு உறுப்பு நாடுகள் இது போன்று சிறப்பு விளையாட்டு-கருப்பொருள் யூரோ நாணயங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.