ரஜினி படத்தில் நடிக்க மாட்டேன் – வாய்ப்பை மறுத்த பிரபல நடிகை… காரணம் என்ன?
ரஜினியுடன், பிரபல நடிகை ஒருவர் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடன் நடிப்பதற்கு பல நடிகர், நடிகைகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ரஜினியின் ஒரு படத்திலாவது வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகர்கள் வரிசைக்கட்டி நிற்கும் போது ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்த நடிகை இருக்கின்றார் என்றால் நம்புவது சற்று கடினம் தான்.
ரஜினி படத்தில் நடித்தால் விரைவில் பிரபலமடைந்து விடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க ஒரு பிரபல நடிகை மறுத்துள்ள சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அழகாலும் அதிரடியான நடிப்பாலும் ரசிகர்களின் இதயங்களைக் வென்ற வைஜெயந்திமாலா தான் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க அழைக்கப்பட்டபோது மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நடிகர் ரஜினிகாந்த் ஒரு மேடையில் குறிப்பிட்டுள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘மாப்பிள்ளை’ படத்தில் மாமியார் வேடத்தில் நடிக்க அவரை அழைத்தபோது வைஜெயந்திமாலா மறுத்துவிட்டாராம்.
படக்குழுவினர் தரப்பில் மிகப்பெரிய தொகை கொடுப்பதாக கூறப்பட்ட போதிலும் அவர் வேண்டவே வேண்டாம் என்று மறுத்தமைக்கு காரணம் அந்த படத்தில் மாமியார் கதாபாத்திரத்துக்கும் நடிகர் ரஜினிகாந்த் கதாபாத்திரத்துக்கும் மோதல் ஏற்படும் காட்சி அதிகமாக இருக்கின்றது.
எனவே தன்னால் ரஜினிகாந்தை திட்ட முடியாது என்ற காரணத்துக்காக இந்த பொன்னான வாய்ப்பை மறுத்து விட்டாராம்.
பின்னர் இந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தமையும் அதே படம் நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷ், ஹன்சிகா மற்றும் மனிஷா கொய்ராலா கூட்டணியில் ரீமேக் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.