100 ஆண்டிற்கு பின் ஒரே நாளில் ஹோலி மற்றும் சந்திரகிரணம்.. அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி இவை தான்
நூறு ஆண்டுகளுக்கு பின்பு ஹோலி பண்டிகையுடன் சந்திர கிரகணம் வரும் நிலையில், சில ராசியினர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கின்றது.
ஹோலியுடன் சந்திர கிரகணம்
பொதுவாக ஹோலி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் பால்குண மாத பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையானது ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
இந்த பண்டிகை அன்பு, நல்லெண்ணம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாக கருதப்படுவதுடன், ஒருவருக்கொருவர் வண்ணங்களைத் தெறித்துக்கொண்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் பஞ்சாங்கத்தின் படி, ஹோலி அன்று சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. மார்ச் 25ம் தேதி காலை 10.23 மணி முதல் மாலை 3.02 மணி வரை சந்திர கிரகணம் நிகழும்.
ஆனால் இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் காணப்படாது என்று கூறப்பட்டாலும், சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின்பு ஹோலி அன்று சந்திரகிரகணம் சேர்ந்து வருவதால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். அவை என்னென்ன ராசி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த சந்திர கிரகணத்திலிருந்து சுப பலன்களை பெறுவதுடன், திடீர் நிதி ஆதாயம்ஈ பரம்பரை சொத்து கிடைக்கும். நீண்ட நாளாக நிலுவையில் இந்த பணம் திரும்பக் கிடைக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்
நிலம் வாகனம் வாங்கும் வாய்ப்பும், சமூகத்தில் நல்ல பெயரும் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் பாராட்டு கிடைப்பதுடன், வணிக நிலையும் வலுவாக உயரும். நிதிநிலை, பணவரவு, சொத்துக்களால் நிதி லாபம் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு ஆளுமை மேம்படுவதுடன், தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பும் கிடைக்கும். நிதிநிலையில் மாற்றம், பணம் சம்பாதிக்க பல வழிகள், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வசதியான வாழ்க்கையும், புதிய வெற்றியும் கிடைக்குமாம்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஹோலி நாளில் சந்திர கிரகணத்துடன், மீனத்தில் சூரியன், ராகு மற்றும் சந்திரன் இணைவதும் ஏற்படுகின்றது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் கிரஹண யோகம் உருவாவதுடன், ஜோதிட சாஸ்திரத்தில் அசுபமாகவும் கருதப்படுகின்றது. ஆதலால் கவனமாக இருக்க வேண்டிய ராசியை இங்கு தெரிந்து கொள்வோம்.
மகரம்
பழைய நோய்கள் வர வாய்ப்புள்ளதுடன், சட்ட சிக்கல்களையும் சந்திப்பீர்கள். அதிகாரிகளுடன் மோதல் ஏற்படும் இந்நேரத்தில் கவனமாகவும் இருக்கவும். வீட்டு பிரச்சினைகளால் கவலை, பிறரிடம் ஏமாறும் அபாயயுமும் ஏற்படும்.
மீனம்
மீன ராசியில் கிரகண யோகம் ஏற்படுவதால், முடங்கிய பணிகள் மேலும் தள்ளிவைக்கப்படுவதுடன், விமர்சனங்களையும் சந்திக்க நேரிடும். முதலீடுகளை தவிர்க்கவில்லையெனில் பிரச்சினை ஏற்படுமாம். மனைவியின் உடல்நலத்தில் அக்கறை கொள்வதுடன், பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்யவும்.