பேடிஎம் பயனாளரா நீங்கள் ? நாளை தான் கடைசி நாள்… உடனே செஞ்சிடுங்க..!
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ஆர்பிஐ (RBI) அளித்துள்ள காலக்கெடு நாளை முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த காலக்கெடுவுக்கு பிறகு, பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு எந்தெந்த சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்பதில் இன்னும் குழப்பம் உள்ளது. அது பற்றி ரிசர்வ் வங்கி அளித்துள்ள விரிவான தகவலை பற்றி இங்கே காணலாம்.
மார்ச் 15க்குப் பிறகும், பேடிஎம் பயனர்கள் ரீஃபண்டுகள், கேஷ்பேக்குகள், பார்ட்னர் வங்கிகளிடமிருந்து ஸ்வீப்-இன்கள் அல்லது அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட வட்டி ஆகியவற்றை பெற முடியும்.
கணக்கில் இருப்பு இருக்கும் வரை, டோல்களில் கட்டணம் செலுத்த பயனர்கள் தங்கள் FASTag -ஐப் பயன்படுத்தலாம். எனினும், மார்ச் 15க்குப் பிறகு டாப் அப்கள் அனுமதிக்கப்படாது.
வாலட்டில் இருப்பு இருக்கும் வரை, பயனர்கள் அதை பயன்படுத்தலாம், தொகையை எடுக்கலாம் அல்லது மற்றொரு வாலட் அல்லது வங்கிக் கணக்கிற்கு நிதியைப் மாற்றலாம்.
மார்ச் 15க்குப் பிறகும் ரீஃபண்டுகளும், கேஷ்பேக்குகளும் கிரெடிட் ஆகும். பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் கேஷ்பேக்குகள் கிரெடிட் செய்ய முடியும். Paytm பேமெண்ட்ஸ் வங்கியைத் தொடர்புகொண்டு, வாடிக்கையாளர்கள் தங்கள் வாலட்டை க்ளோஸ் செய்து, அதில் உள்ள தொகையை வேறொரு வங்கியில் வைத்திருக்கும் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
மார்ச் 15க்குப் பிறகும், பயனர்கள் தங்கள் கணக்கில் உள்ள தொகையை எடுக்கலாம், பயன்படுத்தலாம், தங்கள் கணக்கிலிருந்து பிற கணக்குகளுக்கு பணத்தை மாற்றலாம்.
வித்டிரா அல்லது டெபிட் மேண்டேட் போன்ற தேசிய தானியங்கு கிளியரிங் ஹவுஸ் (NACH) மேண்டேட்டுகள் உங்கள் கணக்கில் பணம் உள்ளவரை செயலில் இருக்கும். இதில் ஓடிடி சந்தாவும் அடங்கும். இருப்பினும், மார்ச் 15, 2024க்குப் பிறகு, உங்கள் கணக்குகளில் கிரெடிட்கள் அல்லது டெபாசிட்கள் அனுமதிக்கப்படாது.
உங்கள் கணக்கில் இருப்பு இருக்கும் வரை டெபிட் மேண்டேட்கள் தொடரும். தொகை எப்பொழுதும் போல தானாக கழிக்கப்படும். இருப்பினும், கிரெடிட்கள் அல்லது டெபாசிட்கள் எதுவும் அனுமதிக்கப்படாது என்பதால், மற்றொரு வங்கியில் EMI பேமெண்ட்டுகளை அமைப்பதற்கான மாற்று முறைகளை நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.