கோவை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன வெதர் மேன்..!
கோவை வெதர்மேன் என்று அழைக்கப்படும் சந்தோஷ் கிருஷ்ணன் கோடை மழை பற்றி வழங்கியிருக்கக்கூடிய அண்மைய தகவல்:-
மார்ச் இறுதி வரை வானிலை இப்போது இருப்பது போலவே இருக்கும். ஏப்ரல் முதல் வாரத்தில் கேரளா மற்றும் கொங்கு மண்டல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கும். ஏப்ரல் இரண்டாம் வாரம் என்ற போது நன்றாகவே மழை பெய்யும்.மே மாதத்தில் தமிழகத்தின் உள்பகுதிகள் பலவற்றில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
என்னதான் இந்த காலங்களில் மழைப்பொழிவு இருந்தாலும் கொங்கு மண்டலம் மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை குறைப்பதற்கு இந்த மழை போதாது.ஜூன் அல்லது ஜூலையில் பருவ மழை தலை காட்டும் பொழுது தான் இந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.