Accident : பெரும் துயரம்.. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இருவர் விபத்தில் சிக்கி பலி.. பலர் படுகாயம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி மகாவீர் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (75), இவர் கடந்த 23-ஆம் தேதி சக்கர வாகனத்தில் மேல்மருவத்தூருக்குச் சென்றுவிட்டு வந்தவாசிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மருதாடு கிராமத்தில் வந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலகிருஷ்ணன், அங்கு புதன்கிழமை உயிரிழந்தார்.
வந்தவாசியில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் உறவினர்களான சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன் (55), இவரது மனைவி நீலா (45), மகள் மேகலா தின மகன் பிரணவ், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நீலாவின் தங்கை கௌதமி (35), இவரது மகன்கள் ஹரிகிருஷ்ணன் (15), விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று விட்டு மாலை சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை வேலமுருகன் ஓட்டினார்.
வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலை சாலவேடு கிராமம் அருகே கார வந்த போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிகுந்த லாரி மீது மோதியது. இதில் நீலா, ஹரிகிருஷ்ணன ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா வேல்முருகன். மேகலா, பிரணவ், கௌதமி, விஜயபாஸ்கர் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டனர்
தகவல்யறிந்த கீழ் கொடுங்காலூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இரண்டு உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்த துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டு மீண்டும் ஊர் திரும்பிய போது இருவர் சாலை விபத்தில் பலியானது வந்தவாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.