கை,கால் மரத்து போவது ஏன்னு தெரியுமா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்
உணர்வின்மை அல்லது மரத்து போதல் என்னும் நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் உடலில் எந்த பகுதியை வேண்டுமானாலும் தாக்கலாம்.
நீண்ட நேரம் கால்களை மடக்கியவாறு உட்கார்ந்திருக்கும் போது, கால்களை தொங்கவிட்ட நிலையில் உட்கார்ந்து பணி செய்யும் போது தொலைதூர பயணங்களின் போதும் கை கால்கள் மரத்து போவதை அனைவருமே உணர்ந்திருக்க கூடும்.
இந்த உணர்வின்மை கை கால் மரத்து போதல் மற்றும் கூச்ச உணர்வுக்கான காரணங்கள் நோய் என்று கூற முடியாவிட்டாலும் இவை அடிக்கடி ஏற்பட்டால் அது உடலில் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாகவே கருதப்படுகின்றது.
நமது உடலில் ரத்த ஓட்டம் தடைப்படும் பொழுது வலி, தசை பிடிப்பு, மரத்து போதல், செரிமான கோளாறுகள், கைகள் அல்லது கால்கள் குளிர்ந்து போதல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
இதற்கான முக்கிய காரணம் உறுப்புகளுக்கு இயல்பாக செல்ல வேண்டிய ஆக்சிஜன் சரியாக கிடைக்காதது தான். இது போன்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும்.
இது போன்ற வியாதிகளை சில மருந்துவில்லைகள் நொடிப்பொழுதில் குணமாக்கி விடுகின்றன. ஆனால் உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து விடுகின்றது.
எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் அதற்கு சரியான தீர்வாகவும் மருந்தாகவும் உணவுவே பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் இது போன்ற நோய்கள் ஏற்பட்டால் என்ன மாதிரியான உணவுகள் தீர்வு கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக உடல் உறுப்புகள் சரியாக இயங்க இரத்த ஓட்டம் மிகவும் அவசியமாகின்றது. ஏனெனில் ரத்தம் மூலமாகவே உறுப்புகளுக்கு ஆக்சிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. எனவே இரத்த ஒட்டத்தை சீர்செய்யும் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் மற்றும் பூண்டு
உடலின் ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம் பாதுகாப்பதில் பூண்டு முக்கிய இடம் பிடிக்கின்றது. அத்துடன் வெங்காயத்தில் காணப்படும் ஆக்சிடன்ட்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் ஆகிய ஊட்டசத்துக்களும் இரத்தயோட்டத்தை சீர்படுத்துக்கின்றன.
உப்பு நீரில் வாழும் மீன்கள்
ரத்த நாளங்களில் சீராக இயங்குவதற்கு ஒமேகா-3 அமிலங்கள் மிகவும் அவசியம். வஞ்சரம், கானாங்கெளுத்தி, சூரை, நன்னீர் மீன் போன்ற மீன்களில் அதிக அளவு ஒமேகா-3 அமிலங்கள் காணப்படுகிறது.
சிட்ரஸ் பழங்கள்
உடலுக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குவதில் சிட்ரஸ் பழங்கள் சிறந்தது. ஆகவே ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிடுதல் வேண்டும்.
நட்ஸ் வகைகள்
நட்ஸ் வகைகளில் மெக்னீசியம், பொட்டாசியம் ஆர்கினின் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. இதனால் ரத்த ஓட்டம் சீராகின்றது.
இதனால் வால்நட், ஹேசில்நட் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை அடிக்கடி எடுத்து கொள்வது கை, கால் மரத்து போகும் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.