40 வயதில் காதலரை கரம்பிடித்த எஸ்ஜே சூர்யா பட நடிகை … வைரல் புகைப்படங்கள்
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை மீரா சோப்ராவின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை மீரா சோப்ரா
பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் பரினீதி சோப்ராவின் சகோதரியான மீரா சோப்ரா, கடந்த 2005ம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான அன்பே ஆருயிரே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா சோப்ரா.
தமிழ் சினிமாவில் நிலா என்ற பெயரில் அறிமுகமாகியிருந்தார். முதல் படத்திலேயே அதிக கிளாமர் காட்டி நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.
இந்த படத்தக்கு கலவையான விமர்சணங்கள் வந்த போதும் தொடர்ந்து மீராவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
அதன்படி ஜாம்பவான், சிம்புவுடன் காளை, ஜகன்மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.
தமிழ் சினிமாவில் மாத்திரமன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்த நிலா, தன்னுடைய தந்தையின் தொழிலை கவனித்து வந்ததால் பல படங்களில் நடிக்க முடியாமல் போனது.
தமிழ் படங்களை தொடர்ந்து பிற மொழிகளும் போதிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது திருமணம் வாழ்க்கைக்கு தயாராகிவவிட்டார். தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துகொடுள்ளார், மீரா சோப்ரா.
40 வயதில், நீண்ட நாள் காதலரான ரக்ஷித் கெஜ்ரிவாலை, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செயதுக்கொண்டுள்ளார்.
ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்து முடிந்த இவரது திருமண புகைப்படங்களை தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்னார்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.