நடிகர் விஜய் முதன் முதலில் பயணித்த கார் எதுனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய் முதன்முதலாக எந்த காரில் பயணித்தார் என்ற தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய், தற்போது அரசியலிலும் இறங்கியுள்ளார். இவரது படம் வெளியீடு என்றாலே அன்று திரையரங்குகள் திருவிழா கோலம் தான் காணும்.

தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT படத்தில் நடித்து வருவதுடன், இப்படத்திற்கு பின்பு சினிமாவை விட்டு விலகவும் உள்ளார்.

முழுநேர அரசியல் பணியில் ஈடுபட போவதாகவும், தான் உருவாக்கியுள்ள தமிழக வெற்றிக் கழம் என்னும் கட்சியை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்துள்ளாராம்.

விஜய் ஒரு கார் பிரியர் என்பது நம்மில் பலருக்கு தெரியும், சமீபத்தில் கூட BMW i7 சீரிஸ் சொகுசு காரை இரண்டே முக்கால் கோடிக்கு வாங்கியது வைரலாகியது.

விஜய் முதன் முதலில் பயணித்த கார் என்ன?
விஜய்யின் தந்தை சந்திரசேகர் இயக்குனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் மூன்று படங்கள் மட்டுமே இயக்கியிருந்த காலத்தில், மனைவி மற்றும் மகனுடன் ஸ்கூட்டரில் நின்று கொண்டிருந்த போது வெள்ளை நிற அம்பாசிடம் ஒன்று அவர்கள் அருகே நின்றுள்ளது.

அதில் இருந்த பிரபல நடிகர் ஸ்கூட்டர் வேண்டாம் காரில் பயணிக்க கூறியுள்ளார். ஆரம்பத்தில் சந்திரசேகர் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

கார் வைத்திருக்கும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்று தயங்கியுள்ளார். உடனே குறித்த நடிகர் ஒரு கமிட்மெண்ட் இருந்தால் இன்னும் அதிகமாக முன்னேறுவீர்கள் என்று கூறி தன்னிடம் இருந்த சிகப்பு நிற அம்பாசிடர் காரை கொடுத்துள்ளார்.

இதனை கடனாக கூட வாங்கிக்கொள்ளுங்கள்… உங்களுக்கு முடிந்த அளவு பணம் கட்டுங்கள் என்று கூறி கம்மியான விலையை கூறியுள்ளார்.

அப்பொழுது சந்திரசேகர் அந்த 7191 என்ற எண் கொண்ட சிகப்பு நிற அம்பாசிடரை எடுத்து வந்துள்ளார். சந்திரசேகருக்கு அந்த காரை கொடுத்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் ஜெய் சங்கர் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *