செவ்வாய் பெயர்ச்சி… வாழ்க்கையில் உச்சத்தை தொட போகும் 5 ராசிகள்
கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் செவ்வாய், தைரியத்தையும் மன உறுதியையும் கொடுக்கும் கிரகமாகும். மார்ச் மாதம் 15 ஆம் தேதி, செவ்வாய் (Mars Transit) கும்ப ராசியில் நுழைய இருக்கிறார். அங்கே வீற்றிருக்கும் சுக்கிரனுடன் அவர் இணைவார். ஆடம்பரத்தையும், வசதியான வாழ்க்கையும் அழிக்கும் சுக்கிரன், செவ்வாயுடன் இணைவதால், குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் உற்சாகம் ஏற்படும். செவ்வாயின் அருளும், சுக்கிரனின் அனுகூலமும் இணைந்து, சில ராசிகளுக்கு, வேலையில் தொழிலில் வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும். செல்வ வளம் பெருகும். வாழ்க்கையில் இந்த ராசிகள் உச்சத்தை அடைவார்கள்.
மேஷ ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
மேஷ ராசியினர் (Aries Zodiac Sign) செவ்வாய் பெயர்ச்சியினால் சாதகமான பலன்களை பெறுவார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களை கொண்டு வந்து சேர்க்கும். தன்னம்பிக்கையும் செயல் திறனும் அதிகமாக இருக்கும். கடின உழைப்புடன் அதிர்ஷ்டமும் கை கொடுக்கும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் தொழிலில் எதிர்பார்த்து வெற்றி கிடைப்பதால், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள்.
சிம்ம ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
சிம்ம ராசியினருக்கு (Leo Zodiac Sign), செவ்வாய் , பெயர்ச்சி காரணமாக, வேலையில் தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி, முன்னேற்ற பாதையில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சவால்கள் அனைத்தையும் திறமையாக கையாண்டு, அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். வாழ்க்கையில் வீடு வாங்கும் கனவு நிறைவேறும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும்.
கன்னி ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
கன்னி ராசியினருக்கு (Virgo Zodiac Sign) செவ்வாய் பெயர்ச்சி அனுகூலங்களை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். வேலையில் தொழில் சந்தித்து வந்த பிரச்சனைகள் நீங்கி, முன்னேற்றம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட காலம் உடல் பிரச்சனை எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை தொடங்குவார்கள்.
தனுசு ராசிக்கான செவ்வாய் பயிற்சி பலன்கள்
தனுசு ராசியினருக்கு (Sagittarius Zodiac Sign) செவ்வாய் பெயர்ச்சி சாதகமான பழனங்களை கொண்டு வந்து தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது. பணியிடத்தில் சக ஊழியர்கள் மூலம் கிடைக்கும் ஆதரவும் உதவியும், வேலையில் முன்னேற உதவும். கைக்கு வராது என்று நினைத்த பணம், கைக்கு வந்து சேரும். வெளிநாட்டில் வேலை செய்யவும் கல்வி கற்கவும் விரும்புவார்கள், அது தொடர்பாக நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.
கும்ப ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
கும்ப ராசியினர் (Aquarius Zodiac Sign) செவ்வாய் பெயர்ச்சி காரணமாக, அபரிமிதமான பலன்களை அடைவார்கள். வேலையில் அவர்கள் நினைக்கிற அளவு பெரும் முன்னேற்றத்தை காண்பார்கள். இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இதனால் வரும் வருமானமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எல்லா விஷயங்களிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கும். கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும்.