கார் ஏசியில் அதிக கூலிங் கிடைக்க மாட்டுதா..? இந்த மெத்தேடுகளை ட்ரை பண்ணிப்பாருங்க..

கார்களின் ஏசி வெளியே நிலவும் கடுமையான வெப்ப சூழலில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கிறது. நமக்கு தேவையான வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. லாங்-டிரைவிங் அல்லது டிராஃபிக்கில் சிக்கி நீண்ட நேரம் டிரைவ் செய்ய நேரிடும்போது கார் ஏசி அசௌகரியத்தை குறைக்க உதவுகிறது. அதிக வியர்வை வெளியேறுவது மற்றும் வாகனம் ஓட்டும்போது சோர்வு ஏற்படுவது போன்றவற்றை தடுக்கிறது. டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்துகிறது.

சிலர் வெப்பமான கோடையில் மட்டுமல்ல, மழை நேரத்திலும் கூட காரில் AC போட்டு கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். இவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் கிளைமேட்டை பொருட்படுத்தாமல் உங்கள் காரின் AC செயல்திறன் உங்களுக்கு முக்கியமாக இருக்கும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக உங்கள் காரின் ஏசி சமீப நாட்களாக குறைந்த கூலிங்கை கொடுக்கிறது. இதனால் நீங்கள் டிரைவிங்கின்போது அசௌகரியமாக உணர்கிறீர்கள் என்றால் உங்கள் காரின் ஏசி கூலிங்கை மேம்படுத்துவது எப்படி என்பதற்கான சில ஈஸி ஹேக்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள் : முடிந்தவரை எங்கு சென்றாலும் உங்கள் காரை நிழலான இடத்தில பார்க் செய்ய முயற்சிக்கவும். முழுவதும் கவர் செய்யப்பட்ட பார்க்கிங் ஏரியா, அப்படி இல்லை என்றால் மரங்களுக்கு அடியில் என நிழலாக இருக்கும் இடத்தில் காரை பார்க் செய்ய முன்னுரிமை கொடுங்கள். வெயிலில் காரை நிறுத்தாமல் நிழலில் நிறுத்திய பின், காரை சில மணிநேரங்கள் கழித்து வந்து எடுப்பது கார் கேபினை இயல்பான வெப்பநிலையில் வைக்க உதவுவதோடு, உங்கள் கார் A திறம்பட செயல்பட உதவுகிறது.

ரீசர்குலேஷன் மோட்-ஐ பயன்படுத்துங்கள் : உங்கள் காரின் AC-யை ரீசர்குலேஷன் மோடிற்கு மாற்றுங்கள். இந்த Mode வெளியில் இருந்து சூடான காற்று கார் கேபினுக்குள் நுழைவதை தடுக்கிறது. air-recirculation பட்டனை பயன்படுத்துவது உங்கள் கார் கேபினை முடிந்தவரை விரைவாக குளிர்விக்க உங்கள் ஏசி-க்கு உதவுகிறது மற்றும் உங்கள் காரில் இருக்கும் ஏசி சிஸ்டமின் ஒர்க்லோட்-ஐ குறைக்கிறது.

ஜன்னல்களை திறந்து விடுங்கள் : ஒருவேளை உங்கள் காரை நிழலில் பார்க் செய்ய முடியாமல் நீண்ட நேரம் வெயிலில் பார்க்க செய்ய நேரிட்டுவிட்டது என்றால் கவலை வேண்டாம். காரில் ஏசி-யை ஆன் செய்வதற்கு முன் கார் ஜன்னல்கள் அனைத்தையும் சில நிமிடங்களுக்கு செய்துவிடுங்கள். இதனால் கேபின் உட்பட காரில் இருக்கும் அனல் காற்று வெளியேறும். சூடான காற்றை விரைவாக வெளியேற்றும் வகையில் உங்கள் காரில் சன்ரூஃப் இருந்தால் அதையும் திறக்கவும்.

ஏர் ஃபில்ட்டர்களை க்ளீன் செய்யவும் : உங்கள் காரின் ஏசி சிஸ்டமில் உள்ள ஏர் ஃபில்டர்களை தவறாமல் சுத்தம் செய்யுங்கள் அல்லது உரிய நேரத்தில் மாற்றிவிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஏர் ஃபில்டர்ஸ்களில் படியும் அழுக்குகள் காற்றோட்டத்தை கட்டுப்படுத்தும். இதனால் காற்றை கூலாக மாற்ற உங்கள் கார் ஏசி கடினமாக வேலை செய்ய நேரிடுகிறது.

ஏசி-யை ஆன் செய்யும் ஃபேன் : காரில் ஏசியை ஆக்டிவேட் செய்வதற்கு முன் ஓரிரு நிமிடங்களுக்கு ஃபேனை ஹையஸ்ட் செட்டிங்கில் வைத்து இயக்கவும். இந்த டிப்ஸ் வென்ட்ஸ்களில் இருந்து சூடான காற்றை வெளியேற்ற உதவுகிறது மற்றும் உங்கள் கார் கேபினை குளிர்விக்க ஏசி எடுத்து கொள்ளும் நேரத்தை குறைக்கிறது.

சன்ஷேட் அல்லது விண்டோ விஸர்களை பயன்படுத்துங்கள் : உங்கள் காரை பொதுவெளியில் பார்க் செய்ய நேரிட்டால் சூரிய ஒளியை நேரடியாக காரினுள் விழுவதை தடுக்க கண்ணாடியில் சன் ஷேட் மற்றும் சைட் விண்டோக்களில் window visors-களை பயன்படுத்தவும். இந்த பழக்கம் காரின் இன்டீரியரை கூலாக வைக்க உதவுகிறது மற்றும் ஏசி லோடை குறைக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *