பிப்ரவரியில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் எவை..? முழு பட்டியல் இதோ!
சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா இருந்து வருகிறது. இதனால் நம் நாட்டில் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் வாகனத் தொழில் காரணமாக பயணிகள் வாகனப் பிரிவு, இரு சக்கர வாகனப் பிரிவு, மின்சார வாகனப் பிரிவு மற்றும் பல பிரிவுகளில் விற்பனை எண்ணிக்கையில் சாதனை படைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் PV எனப்படும் பயணிகள் வாகன பிரிவை சேர்ந்த கார்கள் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதம் அதாவது பிப்ரவரி 2024-ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார் மாடல்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் 6 மாடல்களும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2 மாடல்களும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்களின் தலா ஒரு மாடல்களும் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள கார்களில் 6 எஸ்யூவி-க்கள், 2 ஹேட்ச்பேக்ஸ்கள், 1 செடான் மற்றும் 1 எம்பிவி அடக்கம். சரி இப்போது இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள கார்கள் என்ன, அவை எவ்வளவு எண்ணிக்கையில் கடந்த மாதம் விற்பனையாகி உள்ளன என்பதை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
அதேபோல் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள கார்களில் 6 எஸ்யூவி-க்கள், 2 ஹேட்ச்பேக்ஸ்கள், 1 செடான் மற்றும் 1 எம்பிவி அடக்கம். சரி இப்போது இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள கார்கள் என்ன, அவை எவ்வளவு எண்ணிக்கையில் கடந்த மாதம் விற்பனையாகி உள்ளன என்பதை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இதை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பன்ச்-ன் 18,438 யூனிட்ஸ்கள் விற்பனையாகி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பட்டியலில் மூன்றாவது இடத்தில் மாருதி சுசுகியின் பலேனோ இருக்கிறது. இந்த காரின் 17,517 யூனிட்ஸ்கள் இந்த பிப்ரவரி மாதத்தில் விற்கப்பட்டு உள்ளன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் டிசையர் கார் இந்த பிப்ரவரி மாதத்தில் 15,837 யூனிட்ஸ்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரெஸ்ஸா காரின் விற்பனை பிப்ரவரி 2024-ல் 15,765 யூனிட்ஸ்களாக உள்ளது.
இந்த பட்டியலில் அடுத்து இருப்பது மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்பு தான். நிறுவனத்தின் எர்டிகா கார் 15,519 யூனிஸ்கள் கடந்த மாதம் விற்கப்பட்டு உள்ளன.
பட்டியலில் அடுத்து இருப்பது ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார் ஆகும். இந்த காரின் 15,276 யூனிட்ஸ்களை பிப்ரவரி 2024-ல் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ (என் மற்றும் கிளாசிக்) கடந்த மாதத்தில் 15,051 யூனிட்ஸ்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் கார் கடந்த மாதம் 14,395 யூனிட்ஸ்கள் விற்பனையாகி உள்ளன.
பட்டியலில் கடைசி இடத்தில் மாருதி சுசுகியின் ஃப்ரான்க்ஸ் கார் உள்ளது. கடந்த மாதம் இந்த காரின் 14,168 யூனிட்ஸ்களை நிறுவனம் விற்றுள்ளது.