ஹூண்டாய் க்ரெட்டா Vs க்ரெட்டா என்-லைன் வித்தியாசங்கள் என்ன..!

ஹூண்டாய் வெளியிட்ட புதிய க்ரெட்டா எஸ்யூவி வரிசையில் புதிதாக வந்துள்ள என்-லைன் மாடல் என இரண்டையும் ஒப்பீடு செய்து வித்தியாசங்களை அறிந்து கொள்ளலாம். இரண்டு மாடல்களும் அடிப்படையான கட்டுமானத்தை பகிர்ந்து கொண்டாலும் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றிருப்பதுடன் சிறிய பெர்ஃபாமென்ஸ் மாற்றங்களை பெற்றதாக வந்துள்ளது.

க்ரெட்டா எஸ்யூவி எஞ்சின் விபரம்
இரு மாடல்களும் 160PS பவர் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை பகிர்ந்து கொண்டாலும் கூடுதலாக க்ரெட்டா மாடல் 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 115 hp பவர், 143.8 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் சாதரண பெட்ரோல் எஞ்சின் பெற்றுள்ளது.

Engine கியர்பாக்ஸ் மைலேஜ்
1.5-litre NA petrol 6MT 17.4kmpl
6iMT 17.7kmpl
1.5-litre turbo-petrol 7DCT 18.4kmpl
1.5-litre diesel engine 6MT 21.8kmpl
6AT 19.1kmpl
Creta N-line 6MT 18kmpl
6DCT 18.2kmpl
எஞ்சின் இரண்டு மாடல்களுக்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் சற்று ஸ்போர்ட்டிவான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் வகையில் க்ரெட்டா என்-லைன் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது.

க்ரெட்டா என்-லைன் டிசைன்

க்ரெட்டா மாடலில் இருந்து வேறுபட்ட தோற்ற அமைப்பினை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய கிரில் ஆனது என் லைன் மாடலுக்கு N-line பேட்ஜ் ஆனது லோகோவிற்கு அருகில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக பம்பரில் சிவப்பு நிற இன்ஷர்ட் பெற்றதாக வந்துள்ளது. மற்றபடி, எல்இடி ஹெட்லைட், ரன்னிங் விளக்குகளில் எந்த மாற்றமும் இல்லை.

பக்கவாட்டில் க்ரெட்டா மாடல் 17 அங்குல வீல் பெற்றிருக்கின்ற நிலையில் என்-லைனில் 18 அங்குல வீல் பெற்று N பேட்ஜ் மற்றும் சிவப்பு நிறத்தை காலிப்பர் மற்றும் ஸ்கிட் பிளேட்டில் கொடுத்துள்ளதால் இரு மாடல்களும் பக்கவாட்டில் வேறுபாடினை பெற்றுள்ளன.

பின்புறத்தில் எல்இடி டெயில் லைட், ரன்னிங் விளக்குகள் ஒரே மாதியாக அமைந்தாலும், பம்பரில் சிறிய மாற்றத்தை தந்து சிவப்பு நிறத்தை சேர்த்து கூடுதலாக என் பேட்ஜ் மட்டுமே கொண்டதாக அமைந்துள்ளது.

க்ரெட்டா என் லைன் Vs க்ரெட்டா இன்டிரியரில் எந்த பெரிய மாற்றங்களும் வசதிகளில் இல்லை. ஆனால் பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களை கொண்டுள்ளது. குறிப்பாக என்-லைனில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சிவப்பு நிற இன்ஷர்ட்டுகள் மற்றும் என் பேட்ஜ் உள்ளது. சாதரண கிரெட்டா கிரே மற்றும் வெள்ளை நிற கலவையை பெற்றுள்ளது.

மற்றொரு முக்கிய மாறுதலாக ஸ்டீயரிங் இரு மாடல்களுக்கும் வித்தியாசப்படுதுவதுடன் , கியர் லிவர் நாப் வேறுபாடு உள்ளது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பெற்றதாக என்-லைனும், சாதரண மாடல் 4 ஸ்போக் ஸ்டீயரிங் பெற்றதாக அமைந்துள்ளது.

மற்ற வசதிகளில் இரண்டிலும் பொதுவாக 10.25 அங்குல டிஜிட்டல் மற்றும் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றிருக்கின்றது.

6 ஏர் பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் (HAC) மற்றும் லெவல் 2 ADAS என ஒட்டுமொத்தமாக 70 க்கும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உட்பட 42 அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களுடன் வந்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா Vs க்ரெட்டா என்-லைன் ஆன்ரோடு விலை ஒப்பீடு

ஹூண்டாய் க்ரெட்டா என்-லைன் ஆன்-ரோடு விலை ரூ.21 லட்சம் முதல் ரூ.25.80 லட்சம் வரை அமைந்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆன்-ரோடு விலை ரூ.13.80 லட்சம் முதல் ரூ.25.50 லட்சம் வரை அமைந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *