காரில் AC போட்டு பயணம் செய்தால் Mileage குறையுமா? தெரிந்துகொள்ள வேண்டியவை

கோடை காலம் வந்துவிட்ட நிலையில் கார்களில் AC போட்டு பயணம் செய்தால் காரின் Mileage குறையுமா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.

இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் கோடை காலம் போலவே வெயில் வெளுத்து வாங்குகிறது.

இந்த சூழ்நிலையில் காரில் பயணம் செய்பவர்கள் நிச்சயமாக ஏசியை போட்டு தான் பயணம் செய்வார்கள்.

அதே போல, வெளிக்காற்றும் அனலாக இருக்கும் என்பதால் காரின் ஜன்னலை திறந்து வைக்க முடியாதபடி இருக்கும். இதனால், அவர்கள் காரின் ஜன்னலை மூடு வைத்து ஏசியை ஆன் செய்து வைத்து பயணிப்பார்கள்.

ஆனால், காரில் பயணம் செய்யும் போது நாம் ஏசி போட்டு பயணித்தால் காரின் Mileage குறையுமா, ஜன்னலை திறந்து வைத்து பயணம் செய்தாலும் Mileage பாதிக்கும் என கூறப்படுவது உண்மையா என்ற சந்தேகங்கள் கார் வைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் வரக்கூடும்.

AC போட்டால் Mileage குறையுமா?
காரில் நாம் AC போட்டு பயணம் செய்தால் Mileage குறையும் என்பது உண்மையான தகவல் தான். அதாவது AC compressor இயங்குவதற்கு எஞ்சினில் இருந்து தான் பவரை எடுக்கும். அதனால் Engine power காருக்கு செல்வது குறையும்.

இந்த காரணத்தினால் AC போட்டால் Mileage பாதிக்கப்படும். ஆனால், எவ்வளவு Engine திறனை AC எடுக்கிறது என்பது ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும்.

அதாவது, வெளிப்புற வெப்ப நிலை, காற்றில் உள்ள ஈரப்பதம், காரினுள் நீங்கள் அமைத்திருக்கும் வெப்பநிலையை பொருத்து இன்ஜின் திறனை பயன்படுத்துகிறது. அந்தவகையில், அதற்கு தகுந்தவாறு Mileage மாறுபடும்.

அதேபோல, வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது ஜன்னலை மூடி வைத்திருந்தால் காருக்குள் இருக்கும் வெப்பநிலை அதிகரிக்கும். அதற்கு நீங்கள் ஏசியை ஆன் செய்வது தான் நல்லது.

மேலும், அதிகமாக ஏசியை ஆஃப் செய்துவிட்டு ஆன் செய்தால் வெப்பத்தைக் குறைக்க அதிக திறனில் ஏசி இயங்க வேண்டியிருக்கும். அப்போது, Mileage இன்னும் குறைய வாய்ப்புள்ளது.

இதனால், பயணம் செய்யும் போது ஏசியை ஒருமுறை ஆன் செய்துவிட்டால் பயணம் முடியும் வரை ஆஃப் செய்யாதீர்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *