ஐபிஎல் 2024 சீசனில் அறிமுகமாகும் டாப் 5 வீரர்கள்.. இவங்கள கண்டிப்பா குறிச்சி வச்சிக்கோங்க

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தாரக மந்திரமே வாய்ப்பும் திறமையும் இணையும் இடம் என்பதுதான். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு விளையாடிய பல வீரர்கள் மிகப்பெரிய ஜாம்பவான் ஆக மாறி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் ஒவ்வொரு புது திறமை உலகிற்கு வெளிவரும்.

இந்த நிலையில் வரும் ஐபிஎல் 2018 நான்காம் ஆண்டு சீசனில் அறிமுகமாக போகும் இளம் நட்சத்திர வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பவர் ரச்சின் ரவீந்திரா. இவர் ஏற்கனவே ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

உலக கோப்பையில் பத்து போட்டிகளின் விளையாடி 578 ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திரா, மூன்று சதம், இரண்டு அரை சதம் அடித்திருந்தார். மேலும் இவர் சுழற்பந்து வீசக்கூடிய வீரர் என்பதால் சிஎஸ்கே அணி ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கொடுத்து இவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது.

தற்போது தொடக்க வீரர் கான்வே மே மாதம் தான் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ரச்சின் ரவீந்தராவுக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்கும். மேலும் இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால் வேற லெவலுக்கு சென்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சி எஸ் கே அணி வாங்கியிருக்கும் சமீர் ரிஸ்வி தான். இவரை வலது கை சுரேஷ் ரெய்னா என்று தான் ரசிகர்கள் அழைப்பார்கள்.

சையது முஸ்தாக் அலி கோப்பையில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சமீர் ரிஸ்வி 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். மேலும் சிகே நாயுடு கோப்பையில் முச்சதம் அடித்து அசத்தினார். இதனால் சமீர் ரிஸ்வி, இந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு மிகப்பெரிய ஸ்டார் ஆக வருவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் மும்பை அணி வாங்கியிருக்கும் ஜெரால்ட் கோயிட்சே.

இவர் எஸ்ஏ டி20 தொடரில் ஜே எஸ் கே அணிக்காக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். தற்போது முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அவர் களமிறங்க போகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் எட்டு போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்திய கோயிட்சே மும்பை அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று மும்பை அணி தற்போது வாங்கியிருக்கும் நுவன் துஷாரா என்ற இலங்கை வீரர் மீதுதான் அனைவரின் கண்களும் இருக்கிறது. குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் இவர் மலிங்கா போலவே அபாரமாக யார்க்கர்களை வீசக்கூடியவர். அண்மையில் வங்கதேசத்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியும் சாதனை படைத்தார்.

இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்திருப்பவர் குஜராத் அணியில் அஸ்மதுல்லா உமர்சாய். ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக ஆல்ரவுண்டர் உமர்சாய் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவருடைய பந்துவீச்சும் பேட்டிங்கும் பலரால் பாராட்டப்பட்டு இருக்கிறது. அண்மையில் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் 149 ரன்கள் விளாசி இருந்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *