நான் இருக்கேன்.. எவன் வரான் பார்ப்போம்..! ரஜினி மருத்துவமனையில் இருந்த போது விஜயகாந்த் செய்த விஷயம்…
பொதுவாகவே ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை என்ற பிம்பமே இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் ஒருத்தர் தான் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாதிரியாக வாழ்ந்தார். நிஜ வாழ்க்கையில் அவர் காட்டிய ஆக்ஷன் காட்சிகள் இன்னுமே சிலர்க்க வைக்கும்
ஸ்டைலாக வந்த விஜயகாந்தின் படங்களே அவருக்கு வெற்றியை வரிசையாக குவித்தது. நிஜ வாழ்க்கையில் பல இடங்களில் வேட்டையை மடித்து கட்டி அவர் சண்டையிட்ட காட்சிகளும் நடந்தது. எம்.ஜி.ஆர் இறப்பு சமயத்தில் கூட்டம் அலைமோதியது.
அதனால் உடனே கூட்டத்தில் இறங்கியவர் கையில் துண்டை வைத்து அந்த இடத்தினை சரி செய்தார். எம்.ஜி.ஆர் உடலை வேனில் ஏற்றி அவர் நல்லடக்கம் முடியும் வரை எங்கையும் போகாமல் உழைத்தவர். அந்த காட்சிகள் கூட தற்போது விஜயகாந்தின் இறப்பு சமயத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு விஷயத்தினை சொல்லி இருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாராம். கிட்டத்தட்ட அவருக்கு சுயநினைவும் இல்லை. ஆனால் ஹாஸ்பிட்டலில் கூட்டம் அலைமோதுகிறது. பத்திரிக்கையாளர் ஒரு பக்கம், ரசிகர்கள் ஒரு பக்கம் என கூட்டத்தை கட்டுப்படுத்தே முடியவில்லை.
விஷயம் கேட்டு அங்கு வந்த விஜயகாந்த் ஐஞ்சா நிமிஷத்தில் அந்த இடத்தினை சரி செய்து விட்டாராம். ரஜினியை அட்மிட் செய்து இருந்த ரூமுக்கு அருகில் ரூமில் தங்கியவர். எவன் வரானு நான் பார்க்கிறேன் என குடும்பத்துக்கு ஆறுதலுடன் தக்க பலமாகவும் இருந்தாராம்.