செவ்வாய் பெயர்ச்சி:இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

வேத ஜோதிடத்தின் படி, செவ்வாய் நிலம், சக்தி, ஆற்றல், துணிச்சல், தைரியம், வீரம், ஆகிய பண்புகளின் காரணி கிரகமாக செவ்வாய் உள்ளார். செவ்வாயின் ராசியில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளை எனவே இத்துறைகளில் சிறப்பான தாக்கம் உள்ளது. கிரகங்களின் அதிபதியான செவ்வாய் கும்ப ராசிக்குள் நுழையப் போகிறார் என்று சொல்லலாம். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். செல்வம் மற்றும் சொத்துக்கள் பெருகும். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இப்போது தெரிந்து கொள்வோம்…

ரிஷபம் (Taurus Zodiac Sign)
செவ்வாய் ராசியில் ஏற்படும் மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் செவ்வாய் உங்கள் ராசியிலிருந்து கர்ம வீட்டிற்கு பெயர்ச்சி அடையப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் உங்கள் பணி வேகம் பெறும். தொழிலதிகளுக்கு வணிகம் சிறப்பாக செயலப்படும், திட்டங்கள் அனைத்தும் வெற்றிப் பெரும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இந்த நேரத்தில் புதிய தொழிலைத் தொடங்கலாம். மேலும், இந்த நேரத்தில் தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள். மறுபுறம், நீங்கள் மூதாதையர் தொழிலால் நல்ல வெற்றியைப் பெறலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முழுமையான ஆதரவு கிடைக்கும்

விருச்சிகம் (Scorpio Zodiac Sign)
செவ்வாயின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அதனுடன் செவ்வாய் கிரகம் விருச்சிக ராசியின் அதிபதி ஆவார். மேலும் செவ்வாய் உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டில் பெயர்ச்சி அடையப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் அல்லது சொத்து போன்றவற்றை வாங்கலாம். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் பொருள் இன்பங்களைப் பெறலாம். இந்த நேரத்தில், தாயுடனான உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், பண முதலீடு வெற்றி தரும். சொத்து, ரியல் எஸ்டேட், மருத்துவத்தில் வேலை புரிபவர்களுக்கு நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

தனுசு (Sagittarius Zodiac Sign)
செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் ஜாதகத்தின் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி அடைவார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். செல்வமும் பெருகும், சிறிது பணத்தை சேமிக்க முடியும். சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தை தொடர்பான சில நல்ல செய்தியைப் பெறலாம். இந்த நேரத்தில் பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். நிதி நன்மைகள் உண்டாகும். பண வரவு அதிகமாகும். தொழிலில் லாபம் கிடைக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *