இவைதான் குபேரருக்கு பிடித்த ராசிகள்: வாழ்நாள் முழுதும் கோடிகளில் புழக்கம், கோடீஸ்வர யோகம்
இந்து சமய சாஸ்திரப்படி குபேரன் செல்வ செழிப்பிற்கான கடவுளாக கருதப்படுகிறார். வாழ்வில் பணத்தேவை ஏற்படும் போது பொதுவாக மக்கள் அன்னை லட்சுமியையும் குபேரரையும் வணங்குவது வழக்கம். குபேரரை வழங்கினால் அனைத்து விதமான செல்வங்காளும் கிடைக்கும். நிதி பற்றாக்குறையிலிருந்து விடுபட்டு பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி நலவாழ்வை பெற மக்கள் குபேரரை வணங்குகிறார்கள்.
மக்களிடம் இருக்கும் செல்வத்தை அதிகரித்து அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க குபேரர் அருள் புரிகிறார். செல்வத்தை அளிப்பதுடன் பணம் இல்லாதவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் அதை அளித்து பிறருடைய இன்னல்களை போக்கி வைக்கும் நல்ல குணத்தையும் குபேரர் அருள்கிறார். ஒரு மனிதனுக்கு குபேரரின் அருள் இருந்தால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நிதி நெருக்கடி ஏற்படாது. அவர் வறுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலையே இருக்காது.
12 ராசிக்காரர்கள் மீதும் குபேரர் (Lord Kuber) அன்போடும் ஆசையோடும் இருக்கிறார். அவர்களுக்கு பணத்திற்கான தேவை ஏற்படும்பொழுது அருள் புரிகிறார். எனினும் அனைத்து கடவுள்களையும் போலவே குபேரருக்கும் பிடித்தமான சில ராசிகள் உள்ளன. இவர்கள் வாழ்வில் வறுமையை காண்பதே இல்லை. இவர்கள் எப்பொழுதும் செல்வ செழிப்பில் திளைப்பார்கள். அதிக சிரமம் எடுக்காமலேயே இவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைத்துவிடும். இவர்கள் கேட்டது அனைத்தும் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்களுக்கு குபேரரின் அருளால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியும் இன்பமும் இருக்கும். இவர்கள் தங்களுடைய மற்றும் தங்கள் குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதில் எப்போதும் வெற்றி பெறுவார்கள். ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், கௌரவம், ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் மற்றும் குபேரரின் அருள் கூடிய ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் வாழ்வில் உச்சம் தொடர்பவர்களாக இருக்கிறார்கள்
துலாம் (Libra)
துலா ராசிக்காரர்கள் குபேரரின் செல்லப் பிள்ளைகளாக இருப்பதால் அவர்கள் எதை செய்ய நினைத்தாலும் அதை முற்றிலுமாக வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். இவர்களுடைய ஜாதகத்தில் குபேரர் சுபமான ஸ்தானத்தில் இருந்தால் இவர்கள் வாழ்வில் செல்வந்தர்களாக மாறி அவ்வாறே இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. குபேரர் எப்பொழுதும் துலா ராசிக்காரர்களுக்கு அருள் புரிகிறார். இவர்கள் இருக்கும் செல்வத்தை பிறருக்கு தானம் செய்து அதில் மகிழ்ச்சி காண்பார்கள்.
கடகம் (Cancer)
குபேரரின் செல்லப்பிள்ளைகளாக கருதப்படும் ராசிகளில் கடகமும் ஒன்று. இந்த ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கடினமான உழைப்பால் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுகிறார்கள். பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் இவர்கள் பலவித வெற்றிகளை அடைகிறார்கள். தங்களிடம் சேரும் பணத்தை தங்களிடமே வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு உதவி நல்ல பலன்களையும் அதன் மூலம் பெறுகிறார்கள். கடக ராசிக்காரர்கள் தங்கள் அன்பான மற்றும் தெளிவான குணத்தால் அனைவரிடமும் நற்பெயரை சம்பாதிக்கிறார்கள்
விருச்சிகம் (Scorpio)
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் வேலை செய்கிறார்கள். இவர்களது கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக சிறுவயதிலேயே மிகப்பெரிய பதவிகளை பெறுவார்கள். இவர்களுக்கு வாழ்வில் எப்பொழுதும் பண பிரச்சனை இருக்காது. மிகவும் புத்திசாலிகளாக இருக்கும் இவர்களை அனைவரும் தங்கள் நட்பு வட்டத்திற்குள் வைத்திருக்க விரும்புவார்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவதில் விருச்சிக ராசிக்காரர்களை மிஞ்ச யாரும் இல்லை. குபேரரின் பரிபூரண அருள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் உண்டு.