பாலியல் வாழ்க்கை சுகமாக இருக்க..‘இந்த’ புத்தகங்களை கண்டிப்பா படிங்க..

பாலியல் வாழ்க்கை/படுக்கையறை வாழ்க்கை குறித்த விஷயங்களை வயது வந்தவர்கள் அறிந்து வைத்திருப்பது இன்றைய உலகில் மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இதை கற்றுக்கொடுக்க நம் நாட்டில் போதுமான கல்வியாளர்கள் இல்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது. இருப்பினும், பலர் இது குறித்து புத்தகங்களை எழுதியுள்ளனர். அப்படி, மக்களுக்கு பாலியல் வாழ்க்கை குறித்து கற்பிக்கும் புத்தகங்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாமா?

இந்தியாவை பொறுத்தவரை பாலியல் விழிப்புணர்வும், பாலியல் கல்வியும் மிகவும் தேவையானதாக இருக்கிறது. இது குறித்த படிப்பினை இல்லாததால் பலருக்கு படுக்கையறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை. இதனால் சமயங்களில் அவர்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளனர்.

இதை பற்றி பேசவே கூடாதா? இந்தியாவை பொறுத்தவரை, “Sex” என்ற வார்த்தையே உபயோகப்படுத்தக்கூடாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்து பேச வேண்டிய அவசியம் இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். சமூக கட்டமைப்புகளின் படி இது குறித்து பேசுபவர்கள் வினோதமாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், இது குறித்த தகுந்த அறிவை அனைவரும் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதனை கற்றுக்கொடுக்க ஒரு சில புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றை படித்தால், பாலியல் கல்வி குறித்தும் நமது உடல் குறித்தும் நிறையவே கற்றுக்கொள்ளலாம். அந்த புத்தகங்களின் லிஸ்ட், இதோ!

காம சூத்ரா: பலர் இந்த புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த புத்தகம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும் ஆங்கிலத்திலும் பல பிரதிகளில் கிடைக்கின்றது. இதனை எழுதியவர், வாத்ஸ்யாயன. இந்த புத்தகம் பாலியல் நடத்தைக்கான ஒரு விரிவான வழிகாட்டியாக செயல்படுகிறது. பாலியல் வாழ்க்கை குறித்து கற்றுக்கொடுப்பது மட்டுமன்றி, காதல், உறவுகள் மற்றும் இன்பங்கள் குறித்தும் கற்றுத்தருகிறது.

The Blue Book: What You Want To Know About Yourself by Tarshi தி ப்ளூ புக் புத்தகத்தை தார்ஷி என்பவர் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தை படித்தால் உங்களை நீங்களே நன்றாக அறிந்து கொள்ளலாம். இப்புத்தகம், வாலிப வயதில் இருப்பவர்களுக்கு பாலியல் அறிவை புகட்டும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பலர் பயன்பெற்றுள்ளதாக கூகுள் விமர்சனத்தில் தெரிவித்துள்ளனர்.

Complete Sex Education guide: இந்த புத்தகத்தை அங்கித் சந்திரா என்பவர் எழுதியிருக்கிறார். இவர், பாலியல் ஆரோக்கியத் துறையில் நிபுணர் ஆவார். இந்த புத்தகம், ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை, உறவு, பாலியல் சுகம் உள்ளிட்டவை பற்றி பேசுகிறது. இதனை வயது வந்த அனைவருமே படிக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

The Sex Book : இந்த புத்தகத்தை லீசா மங்ள்தாஸ் என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகம், சில விருதுகளையும் வென்றுள்ளது. படுக்கையறை சுகம், மனிதர்கள் எப்படி உறவு கொள்ள வேண்டும், பாலியல் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை இந்த புத்தகம் அலசி ஆராய்கிறது. இது படிக்கவும் நகைச்சுவையாக இருப்பதாக பலர் தெரிவிக்கின்றனர்.

Dr Cuterus: இந்த புத்தகத்தை தான்யா நரேந்திரா என்பவர் எழுதியுள்ளார். மனிதனின் உடல் எப்படி இயங்கும் என்பதையும் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் பல்வேறு தலைப்புகளையும் இந்த புத்தகம் எடுத்து பேசுகிறது. இது மாதவிடாய் ஆரோக்கியம், இனப்பெருக்க உறுப்புகள், பாலியல் இன்பம், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் நிறுத்த காலம் உள்ளிட்டவற்றையும் பேசுகிறது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *