ஒரே வாரத்தில் முழங்கால் வரை முடி வளராணுமா? கறிவேப்பிலையில் இதை கலந்து தடவுங்க
நாம் அனைவரும் நமது முடி நீளமாகவும், கருப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்பாடுவோம். ஆனால் மாசுபாடு, தவறான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்ற காரணத்தால் முடி உதிர்தல், நரை முடி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. இதை சரிசெய்ய நாம் பல்வேறு விலையுயர்ந்த பொருட்களை சந்தையில் இருந்து வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இவை நாம் விரும்பும் பலனைத் தருவதில்லை. அதனுடன் இவை கூந்தலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களால் தயார் செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரும்பினால், வீட்டு வைத்தியத்தால் உங்களின் கூந்தலை நீளமாகவும், அடர்த்தியாகவும், வலிமையாகவும் மாற்றலாம். இந்த வைத்தியத்தில் கறிவேப்பிலையும் அடங்கும். ஆம், கறிவேப்பிலை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கூந்தலுக்கும் வலிமையை தரும். ஏனெனில் இதில் என்னற்ற பண்புகள் நிறைந்துள்ளது. குறிப்பாக கறிவேப்பிலையை நெல்லிக்காயுடன் கலந்து தடவி வந்தால், கூந்தல் இரண்டு மடங்கு வளரும், அதடன் கூந்தலை கருப்பாகவும் உதவும்.
முடியை நீளமாக்க கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய்:
கறிவேப்பிலையில் (Curry Leaves) பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இவை உச்சந்தலையில் தேங்கியுள்ள அழுக்கு மற்றும் பொடுகை நீக்க உதவும். இது தவிர, கறிவேப்பிலையில் புரோட்டீன்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளதால், இவை கூந்தலுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது தவிர, இதில் உள்ள வைட்டமின்-பி, நரை முடியை கருப்பாக மாற்ற உதவும். அதே நேரத்தில், நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதல், இது கூந்தலுக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனை பயன்படுத்தினால் முடி உதிர்தல் மற்றும் பொடுகு (Hair Growth – Dandruff) பிரச்சனையில் இருந்து விடுப்படலாம்.
முடி வளர கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காயை எவ்வாறு பயன்படுத்துவது?
கூந்தல் வளர கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் (Indian Gooseberry – Amla) சேர்த்து ஹேர் மாஸ்க் செய்து கூந்தலில் பயன்படுத்தலாம். இந்த ஹேர் மாஸ்க் தயாரிக்க முதலில் ஒரு நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதன் பிறகு அரை கப் கறிவேப்பிலை, நெல்லிக்காயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். நீங்கள் விரும்பினால், அதில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த வெந்தயத்தையும் சேர்க்கலாம். இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் கூந்தலில் நன்கு தடவி சுமார் 1-2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவவும். ஈடிகை நீங்கள் வாரம் 1 முதல் 2 முறை தடவவால். இதனால் கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளரத் தொடங்கும்.