வாழ்நாளை அதிகரிக்க விருப்பமா? சுவாச பிரச்சனையை குறைக்கும் இந்த உணவுகளை மறக்கவேண்டாம்!

பல்வேறு நோய்களுக்கு எதிராக உடலை வலுப்படுத்துவதற்கு சுவாச ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது அவசியம் ஆகும். நமது உணவுமுறையானது, இயற்கையாகவே சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது. எனவே, இயற்கையாகவே சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்க தேவையான உணவுகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகளைப் பயன்படுத்தி, சுவாச மண்டலத்தின் சிக்கலான செயல்பாடுகளை ஆதரிக்கும் வகையில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளலாம். நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை தெரிந்துக் கொள்வோம்.

அழற்சி எதிர்ப்பு உணவு
ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை மாற்றும் ஆற்றல் வாய்ந்தவை. அதேபோல, அன்னாசிப்பழத்தில் இருக்கும் ப்ரோமெலைன் என்சைம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாக இருப்பதால், அன்னாசிப் பழத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.இது நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.

ஆக்ஸிசனேற்ற உணவுகள்

ஆப்பிள், பெர்ரி, ப்ரோக்கோலி மற்றும் க்ரீன் டீ ஆகியவற்றில் ஏராளமாக உள்ள குவெர்செடின், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை மேலும் எதிர்த்து, வீக்கத்தைக் குறைத்து, சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பாஸ்போலிப்பிட்கள் கொண்ட உணவுகள்

சோயா பால், தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பாஸ்போலிப்பிட்கள் நிறைந்த உணவுகள் சுவாச பரிமாற்றத்தை எளிதாக்குகின்றன.

கார்போஹைட்ரேட்டுகள்

குடல் எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை தூண்டும், கோதுமை, கம்பு, பால் பொருட்கள் போன்ற உணவுகளை தவிப்பதன் மூலம், குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து வீக்கத்தின் அபாயத்தைத் தணிக்க முடியும்.

இலைக் காய்கறிகள், சிவப்பு வெங்காயம், திராட்சை மற்றும் ப்ரோக்கோலி போன்ற வீக்கத்தைக் குறைக்கலாம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைத்து, கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை ஓரளவுக்கு சேர்ப்பதன் மூலம் சிஓபிடி மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற நிலைமைகளுடன் தொடர்புடைய சுவாச பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை

ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகளான, மாதுளை, கொய்யாப்பழம், பூசணி விதைகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் இந்த உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன.

நீர் பருகுவது
சுவாச செயல்பாட்டிற்கு முக்கியமானது உடலின் நீர்ச்சத்தை பரமாரிபப்தாகும். உடலில் நீர்ச்சத்து இருந்தால் தான் நுரையீரல் திறமையாக செயல்படும். வழக்கமான நீர் உட்கொள்ளல் சீராக இருந்தால், சளிச்சுரப்பி ஈரப்பதமாக இருக்கும். இது, சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இந்த உணவுகளை உங்கள் தினசரி வழக்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம், உங்கள் சுவாச நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *