உடல் எடை சட்டென குறைய..தினமும் 5 நிமிடம் ‘இதை’ செய்யுங்கள் போதும்!
உடல் எடை, ஆரோக்கியமற்ற முறையில் ஏற்றுவது மிகவும் எளிது. ஆனால் அதே வேகத்தில், அதை குறைக்க முடியுமா என்று கேட்டால், அது முடியாத காரியம் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். அப்படி உடனடியாக எடையை குறைக்க வேண்டும் என்றால் சரியான டயட், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். இதனுடன் சேர்த்து, உடலுக்கு நன்மை பயக்கும் யோகாசனத்தையும் செய்ய வேண்டும். தினமும் 5 நிமிடம் யோகாசனம் செய்தால் உடல் எடை குறையும் என கூறப்படுகிறது.
5 நிமிட யோகாசனம்..
5 நிமிட யோகா பயிற்சி, எடை இழப்பிற்கு உதவும் பழக்கமாக கருதப்படுகிறது. இது குறித்து பேசும் மருத்துவர்கள், ஒரு சில யோகாசனங்கள் மட்டும் உதவும் என கூறுகின்றனர். மேலும், உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால், அதற்கான நிலையான முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
எடை எழப்பிற்கு யோகாசனம் எப்படி உதவுகிறது?
யோகாசனம் செய்யும் போது உடலில் உள்ள பல தசைகள் உதவுமாம். கொழுப்பை குறைப்பதில் இருந்து, உடல் எடையை குறைப்பது வரை பல விஷயங்களுக்கு யோகா பயிற்சி உதவி புரிகின்றது. ஒரு சிலருக்கு மன அழுத்தம் அல்லது மனக்குழப்பம் உள்ளிட்ட காரணங்களினால் இரவில் தூக்கம் வராமல் இருக்கலாம். அந்த பிரச்சனையை சரி செய்வதற்கும், யோகாசனங்கள் உதவுகின்றன.
5 நிமிடம் செய்யக்கூடிய யோகாசங்கள்..
சூர்ய நமஸ்காரம்:
இந்த ஆசனத்தை, கால்களை நிறுத்தி வைத்த நிலையில் ஆரம்பிக்க வேண்டும். இரு கைகளை தலைக்கு மேல்தூக்கி வைத்து சூரியனுக்கு நேராக நிற்க வேண்டும். நேராக நின்று கண்களை மூடி மூச்சை இழுத்து விட வேண்டும். இதை செய்கையில் நன்றாக ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும்.
அதோ முக்கா ஸ்வானாசனா:
இதனை செய்ய முதலில் நேராக நிற்க வேண்டும். பின்பு மெதுவாக உங்கள் தலை தரையில் படும்படி வைத்து இரு கைகளையும் இரு பக்கமும் நீட்டி அந்த நிலையிலேயே சில மணித்துளிகள் நிற்க வேண்டும்.
ப்ளாகாசனா:
இதை ஆங்கிலத்தில் ப்ளாங்க் என்று கூறுவர். இதை செய்வதற்கு கைகளை தரையில் வைத்து உடல் தரையில் படுக்காமல் கையால் பேலன்ஸ் செய்ய வேண்டும். கால் விரல்கள், கை முட்டியை தவிர வேறு எதுவும் தரையில் படக்கூடாது. இதை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை இடைவேளை விட்டு செய்யலாம்.
சலபாசனா:
முதலில் தரையில் படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு தரையில் வயிறு மட்டும் படும்படி படுக்க வேண்டும். வயிறு, தொடை பகுதி தரையில் பட்டால், பரவாயில்லை. கைகளை தரையில் இருந்து எடுத்து கால்களை நீட்ட வேண்டும். இதையும் இடைவேளை விட்டு 5 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.