அடடே! இதெல்லாம் சைவ உணவைப் பத்தின கட்டுக்கதைகள் தானா? சைவம் தான் பெஸ்ட்!
சைவ உணவு நல்லதா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் என்பது, கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போல மிகவும் பழமையானது. அதேபோல, முட்டை சைவம் என்றும் அசைவம் என்றும் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.
சைவ உணவு உட்கொள்பவர்கள் மற்றும் அசைவ உணவுக்காரர்கள், தங்களுக்கு ஏற்றாற்போல உண்மைக்கு மாறான வாதங்களையும் விவாதங்களையும் தொடர்கிறார்களே தவிர, உண்மை எது என்று தெரிந்துக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. அசைவ உணவை உண்பவர்கள் பொதுவாக சைவ உணவு உண்பவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக சொல்கின்றனர்.
இதன் பின்னணி என்னவென்றால், தாவர அடிப்படையிலான உணவு அவர்களுக்கு போதுமான அனைத்து வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் குறிப்பாக புரதத்தை வழங்காது என்பது தான். ஃபிட்னஸ் மற்றும் பாடி பில்டிங் பிரியர்கள் புரதம் நிறைந்த உணவில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு சைவ உணவு போதுமானதாக இருக்காது என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.
உண்மையில் ஆரோக்கியமான சைவ உணவில் புரதம் நிறைந்துள்ளது. ஆனால் சைவ உணவு தொடர்பான மிகப்பெரிய மற்றும் தவறான கட்டுக்கதைகளில் ஒன்று, அதில் போதுமான புரதம் இல்லை என்பதாகவே இருக்கிறது. சைவ உணவைப் பற்றி பலருக்கும் தவறான எண்ணங்கள் உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு சத்து குறைபாடு இருக்கும் என்று பலரும் தாங்களாகவே நினைத்துக் கொள்கின்றனர்.
சைவ உணவில் புரதம்
சைவ உணவு தொடர்பான மிகப்பெரிய மற்றும் தவறான கட்டுக்கதை என்னவென்றால், அதில் போதுமான புரதம் இல்லை என்பது. இது மிகப்பெரிய கட்டுக்கதை. ஏனெனில் சைவ உணவில் 80% புரதம் உள்ளது. பருப்பு வகைகள், விதைகள், தானியங்கள், பருப்புகள் அனைத்தும் புரதத்தால் நிரம்பியுள்ளன. கொட்டைகள் மற்றும் முழு தானியங்கள் புரதத்தால் நிரம்பியுள்ளன.
முழுமையற்ற புரதம்
சைவ உணவில் இருந்து கிடைக்கும் அனைத்து புரதங்களும் முழுமையானவை அல்ல என்பது உண்மைதான். ஆனால் அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட பல்வேறு உணவுகளை உண்ணுபவர்களின் உடல் முழுமையான புரதங்களை உருவாக்க முடியும். சோயா மற்றும் குயினோவாவிலில் முழுமையான புரதங்கள் உள்ளன.
புரதக் குறைபாடு
சைவ உணவில் புரதம் குறைவாக உள்ளது என்பது மிகப்பெரிய கட்டுக்கதை. சைவ உணவு உண்பவர்கள், தினமும் இரண்டு முதல் மூன்று வேளை சத்தான உணவுகளை உண்பவர்களுக்கு புரதச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. சைவ உணவில் இருந்து உடலுக்குத் தேவையான புரதத்தை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.
புரதத்தின் அவசியம்
போதுமான புரதத்தைப் பெறுவதற்கு, எப்போது சாப்பிட்டாலும், அந்த உணவில் புரதம் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் சரியல்ல. குடல் புரதத்தை ஜீரணிப்பது மிகவும் கடினம். எனவே, புரதத்தை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். காலை உணவில் சிறிய அளவு புரதம் சாப்பிட வேண்டும். மீதமுள்ள இரண்டு வேளைகளில் பருப்பு வகைகளை உட்கொள்ளவும்.
புரதம் சாப்பிடுவது தொடர்பான முக்கிய குறிப்புகள்
உங்கள் குடல் சரியாக செயல்படாதபோது, புரதத்தை சரியாக ஜீரணிக்க முடியாது.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு அதிக புரதச்சத்து தேவை.
உணவில் இருந்து உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை உட்கிரகிப்பது என்பது, உங்களுடைய செரிமான அமைப்பைப் பொறுத்தது. எனவே, உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.