வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் கண்களில் இந்த அறிகுறிகள் தோன்றும், ஜாக்கிரதை!!

நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல வித ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை உட்கொள்வது மிக முக்கியம். ஆரோக்கியமான உணவை நாம் உட்கொள்ளவில்லை என்றால் ஊட்டச்சத்துக்களின் குறைபாடு ஏற்படுகின்றது. இந்த குறைபாடுகளால் பல நோய்களும் உருவாகின்றன.

நம் உடல் அங்கங்களை ஆரோக்கியமாக வைத்து, உடல் செயல்பாட்டை சரியாக பராமரிக்க ஊட்டச்சத்துகள் உதவி புரிகின்றன. இன்றைய காலகட்டத்தில் பலரிடம் வைட்டமின் பி12 (Vitamin B12) குறைபாட்டை காண முடிகின்றது. இந்த வைட்டமின் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிக முக்கியமானதாகும். இரத்த அணுக்களின் உருவாக்கம், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, மூளையின் இயல்பான செயல்பாடு ஆகியவற்றுக்கு வைட்டமின் பி2 அவசியம். ஆகையால் இதன் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

உடலில் வைட்டமின் பி12 குறைபாடு (Vitamin B12) ஏற்பட்டால் அதன் அறிகுறிகளும் நமக்கு தோன்ற தொடங்கும். இவற்றில் சில அறிகுறிகள் நம் கண்களிலும் தெரியும். இந்த அறிகுறிகளின் புரிதல் நமக்கு இருக்க வேண்டியது அவசியமாகும். கண்களில் தெரியும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.

கண்களில் தெரியும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் (Vitamin B12 Deficiency in Eyes)

இரவு நேரத்தில் கண்பார்வையில் கோளாறு

வைட்டமின் வீட்டில் குறைபாடு ஏற்பட்டால் இரவு நேரங்களில் நமக்கு பார்ப்பதில் சிரமம் ஏற்படலாம்

கண்களில் சோர்வு

கண்களில் சோர்வான உணர்வு இருப்பது வைட்டமின் பி12 -இன் அறிகுறியாகும்.

வறண்ட கண்கள்

வைட்டமின் பி12 காரணமாக கண்களில் நீர்ச்சத்து குறைந்து கண்கள் வறண்ட நிலைக்கு (Dryness) ஆளாகலாம்

கவனம் செலுத்துவதில் சிக்கல்

வைட்டமின் பி12 குறைபாடு உடலில் இருந்தால் நமது கண் பார்வை மங்கலாகி (Blurred Vision), ஒரு காட்சியில் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்

கண்களில் மஞ்சள் நிறம்

கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவதும் (Yellowness) இந்த குறைபாட்டின் ஒரு அறிகுறி ஆகும்

கண்கள் துடித்தல்

அடிக்கடி கண்கள் துடித்துக் கொண்டிருந்தாலும் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

வைட்டமின் பி12 குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள் (General Symptoms of Vitamin B12 Deficiency)

வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் பலவித பிரச்சினைகள் ஏற்படலாம். இவற்றின் மூலம் வைட்டமின் பி12 குறைபாடு இருப்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகளை பற்றி இங்கே காணலாம்

– வாயில் கொப்புளங்கள்
– பித்த பிரச்சனை
– அதிகமான பசி
– உடலில் இரத்த குறைபாடு
– மூச்சு வாங்குவதில் சிரமம்
– எப்போதும் சோர்வான உணர்வு
– சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல்

கண்களிலோ அல்லது பொதுவாகவோ இந்த அறிகுறிகளைக் கண்டால் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட அறிகுறிகளை காண்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் சிக்கல் பெரிதாவதை தவிர்க்கலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *