சமுக வலைதளத்தில் வைரலாகும் வித்தியாசமான உணவு.. குலோப் ஜாமூன் பீட்சா..!
தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவதற்கு முன்பு மக்கள் அனைவரும் பழங்கள், காய்கறிகள், இறைச்சியை பச்சையாக சாப்பிட்டு வந்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் உணவை பதப்படுத்துதல், சமைத்தல், அவித்தல் போன்றவற்றைக் செய்ய தொடங்கினான். அதன் பின்னர் தான் வகை வகையாக சமைக்கும் வழக்கம் வந்தது.
இந்த நிலையில், பொது மக்களிடையே வித்தியாசமான உணவுகளின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம், குலோப் ஜாமுன் பர்கர், குலோப் ஜாமுன் சமோசா, ஐஸ்கிரீம் மசாலா தோசை, ஐஸ்கிரீம் நூடுல்ஸ், ஐஸ்கிரீம் இட்லி போன்ற விநோதமான உணவு கலவைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வகையில், realfoodler என்ற பெயரில் உள்ள சமூக வலைதளத்தில் குலோப் ஜாமூனை வைத்து பீட்சா செய்வதை பற்றிய வீடியோவை பதிவிட்டுள்ளார். ஒரு உணவு விற்பனையாளர் பீட்சா தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவை வைத்து, அதன் மேல் சர்க்கரைப் பாகை ஊற்றி குலாப் ஜாமூன் பீட்சாவை தயாரிக்கிறார். அதன் பின்னர் குலோப் ஜாமூனை சிறு சிறு துண்டுகளாக மாற்றி மாவின் மீது வைக்கிறார். பீட்சாவை அடுப்பில் வைப்பதற்கு முன்பு, சீஸ் கொண்டு நிரப்புகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, உணவு பிரியர்களிடையை வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.