இன்று முதல் பள்ளிகள் அரை நாள் மட்டுமே..!
இந்தியாவில் கோடை காலம் தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் இப்போதே வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதனால் தெலுங்கானா மாநிலத்தில் கடுமையான வெயில் காரணமாக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது பள்ளிகள் இன்று (மார்ச் 15) முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று முதல் 2023-24 ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி வரை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் ஆகிய அனைத்து நிர்வாகங்களின் கீழ் உள்ள தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் காலை 8 மணி முதல் மதியம் 12.30 வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் மதியம் 12.30 மணிக்கு உணவு வழங்கப்படும் என்றும் அதன்பிறகு மாணவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.