மக்களுக்கு எச்சரிக்கை..! அடுத்த 4 நாட்களுக்கு மிரட்ட போகும் வெயில்..!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியுள்ளது. குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. இன்று முதல் மார்ச் 19ஆம் தேதி வரை இதே போல அதிகமான வெப்பநிலை காணப்படும் என்றும், மார்ச் 18 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையின் காரணமாக மக்கள் அசௌகரியமான நிலையை சந்திக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதேபோல தமிழக கடல் பகுதியில் எந்தவிதமான மோசமான வானிலை எச்சரிக்கை அறிவிப்புகளும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதனால் மீனவர்கள் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல எந்த வித தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.